Tuesday, August 19, 2008


விடுதலை முகாமின் வீரச்சிறார்களே!
விழாக்கள், உறவுகள் கூட்டி உணர்வுகள் கூட்டும், நினைவில் நிற்கும் நிகழ்வுகள் சொல்லும். நிகழ்வுகள் படைக்கும் உன்னத நினைவுகள் உள்ளத்திரையில் பசுமை போர்த்தும், முகம் பார்த்து புன்னகை செய்யும். உன்னத நிகழ்வு உரிமைக்கானதென்றால் உணரும் போதெல்லாம் நரம்புகள் இறுகும், இரத்தப் பயணம் சீர்நிலை கடக்கும், செயல்முனை நோக்கி பாதங்கள் விரையும்.
அகதிப் பட்டறையில் சீரின்றி முடங்கிக்கிடக்கும் நமக்கு இது ‘வெள்ளி விழா” காலம். ஆம், “சிறகொன்று முளைத்து விதையொன்று அலையும் முளைக்க ஒருபிடி மண்தேடி” (இன்குலாப்) என உரிமை மண் விட்டு பிய்த்தெறியப்பட்ட பஞ்சுகளாய் கனடா, ஆஸ்திரேலியா, நார்வே, இந்தியா, செர்மனி, மாஸ்கோ போன்ற தேசங்களில் அகதிகளாய் கரை ஒதுங்க ஆரம்பித்து இது இருபத்தைந்தாம் ஆண்டு, ‘வெள்ளி விழா’.
‘வெள்ளிவிழா’ ஆண்டிலும் அகதியான காரணம் தெரியாது, புரியாது வாழும் பெரியோரும், கல்லூரிப் பேரவையினரும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது தவிர்க்க இயலாத உண்மை.
இலங்கையின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் சிங்களவர்களும், பூர்வீகத் தமிழர்களும் மட்டும் பொறுப்பல்ல. மலையகத் தமிழர்களின் பங்கும் அளப்பெரியது. 1820 ஆம் ஆண்டு கம்பளையிலிருந்து சில மைல்களுக்கு அப்பாலிருந்த சீனாப்பட்டி என்ற ஊரில் காப்பிப் பயிர் செய்து அதிக லாபம் கண்ட ஜார்ஜ் போர்ட் என்ற வெள்ளைக்காரருக்குப் பிறகு தொடர்ச்சியாக காப்பிப் பயிர் செய்ய விரும்பிய வெள்ளையர்களால் 1823 முதல் 1839 வரை மொத்தம் மொத்தமாக ஒப்பந்தக் கூலிகளாக கொண்டுவரப்பட்ட இந்தியத் தமிழர்களே மலையகத் தமிழர்கள்.
கடினமாய் உழைத்து, தம்மையும் நாட்டையும் வளர்த்த மலையகத் தமிழர்களின் உரிமையை, 1948 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 15 ஆம் திகதி இந்தியா- பாக்கிஸ்தான் குடி உரிமைச் சட்டம் இயற்றியதன் வழியாக பறித்து வீர வேகத்தை துவக்கிவைத்தார்கள் ஆட்சியாளர்கள்.
1956,சூன் திங்கள் 05 ஆம் திகதி தமிழ் இல்லாத .........மொழி மட்டுமே ஆட்சி மொழி என சட்டம் இயற்றி தமிழ் மொழியின் உரிமை பறித்தார்கள். நடத்தப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தில் நம்மவர்களை கொடுமையாகத் தாக்கினார்கள்.
வாகனங்களின் இலக்கத் தகடுகளில் உள்ள இலக்கங்களுடன் சிங்கள சிறி எழுத்தை இணைக்கும் மோட்டார் வண்டிப் பதிவுச் சட்டம் கொண்டுவந்து மீண்டும் தமிழை பின்னுக்குத் தள்ளினார்கள். 1958 ஆம் ஆண்டு பெரிய அளவில் நடந்த மொழியுரிமைப் போராட்டமும் அதில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளும் வரலாறாகியுள்ளன.
மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருந்தாலும் கல்வியில் முன்னிலையில் தேர்ச்சி பெற்று பல முக்கியப் பொறுப்புக்களில் தமிழர்கள் சிறப்பாக கடமையாற்றி வந்தவேளையில், 1970 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் முகமது அவர்கள் “தரப்படுத்தல்” என்ற சட்டம் கொண்டு வந்தார். அதாவது, ஒரே நாடான இலங்கையில் அதுவரை கல்வியறிவாற்றலில் சிறந்து விளங்கும் அனைவருக்கும் பணியிடம் என்றிருந்த நிலையை மாற்றி, விகிதாச்சார அடிப்படையில்; பணியிடம் வழங்கப்படும் என சட்டம் இயற்றினார். தமிழர்கள் சிறுபான்மையினர் என்பதால் தமிழருக்கு குறைந்த அளவு விகிதாச்சாரமே தரப்பட்டது. விளைவு, நன்கு படித்து முன்னிலை பெற்றாலும், நமக்கான விகிதாச்சாரம் குறைவானதால் பணியிட இழப்பு உறுதி செய்யப்பட்டது. கற்றறிந்தும் கடையர்களாக்கப்பட்டார்கள். வளரும் தமிழர்கள் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டார்கள்.; நம் முகாமின் இளைய தலைமுறையினர்போல் இல்லாது, நம்நாட்டு மூத்த இளையத் தலைமுறையினர் திறமைக்கு மதிப்பில்லையே என வேகம்கொண்டு ‘தமிழ் மாணவர் பேரவை’ ஆரம்பித்து சத்தியாக்கிரக வழியில் உரிமை வேண்டினார்கள். பிற்காலத்தில் தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பித்து போராடினார்கள்.
தமிழ்மொழியும், வேலைவாய்ப்புக்களும் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத் தள்ளப்பட்டச் சூழலில் 1972 ஆம் ஆண்டு மே திங்கள் 22 அன்று இயற்றப்பட்ட புதிய குடியரசு அரசியலமைப்புச் சட்டம் முதல் குடிமக்களாகிய நம்மை இரண்டாம் தர குடிமக்களாக்கியது. ஒரு மதம் மட்டுமே ஆட்சி மதமென்றும் இந்து, கிறித்தவம், இசுலாம் அடுத்தநிலை மதமென்றும் சட்டம் சொன்னது. முந்தைய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்த உரிமைகளும் புதிய சட்டஅமைப்பில் பறிக்கப்பட்டன.
03.01.1974 முதல் 10.01.1974 வரை யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாளான 10.01.1974 அன்று தமிழறிஞர்களும், தமிழார்வளர்களும் கொடுமையாய்த் தாக்கப்பட்டார்கள். ஒன்பது தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
மொழி உரிமை, வாழ்வுரிமை, மத உரிமை அனைத்தும் இழந்த பிறகு இழப்பதற்கு வேறென்ன இருக்கிறது என சிந்தித்த இளம் மாணவர்களும், மாணவிகளும், அலுவலகங்களில் கடமையாற்றினவர்களும், அரசியலில் இருந்த சில நல்;ல தமிழ் தலைவர்களும் பலவாறு இணைந்து சத்தியாக்கிரக வழியி;ல் போராடினார்கள். போராட்டம் ஒடுக்கப்பட்டதால் வேதனையின் விளிம்பில் நின்றவர்கள், தாங்கள் அனுபவித்த உரிமையை அடுத்தடுத்தத் தலைமுறைக்கும் விட்டுச்செல்ல நினைத்தவர்கள் ஆங்காங்கே இணைந்தார்கள். ஒரே இலக்கினை நோக்கி, தமக்கான போராட்ட முறையைத் தாங்களே தேர்வு செய்தார்கள்.
வேகமும் விவேகமும் சமதளம் கொள்ளும் வரை இழப்புக்கள் அனைத்துப் பிரிவினருக்குமாக இருந்தது. இதில் புரட்சியாளர்கள், ஆதரவாளர்கள், எதிராளர்கள் என எந்த வேறுபாடும் இல்லை. 2008 சூன் 16 இல் செய்தியாளர் மயூரன் கொடுத்தத் தகவலின்படி தாயக விடுதலைக்காக 1982 நவம்பர் 27 முதல் 2008 மே வரை 21,051 பேர் ‘வீர மரணம்” அடைந்திருக்கிறார்கள் இவர்களில் ஆண்கள் 16,516 பெண்கள் 4,535. இது ஒரு பிரிவின் செய்தி மட்டுமே. இதேபோல் காணாமல் போயுள்ளோரும் அதிகம்பேர் இருக்கிறார்கள். 15.08.2007 அன்று அனைத்துலக மன்னிப்புச் சபை தந்துள்ள தகவலின்படி கடந்த முப்பது ஆண்டுகளில் 5,700க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளார்கள். (பதியப்படாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ!).
போராட்டம் உக்கிரம் அடைந்த வேளையில் முடிந்த மட்டும் தாக்குப்பிடித்து இருந்துவிட்டு என் வீட்டிலும் “ஓர் உரிமை விரும்பி” என பெருமையாய் ஒரு மகனையாவது கொடுத்துவிட்டு இடம்பெயர்ந்தவர்கள் இன்று அகதிகளாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். தமிழ் நாட்டில் மட்டும் உள்ள 116 முகாம்களில், எழுபத்தைந்தாயிரத்திற்கு அதிகமானோரும், உலகளவில் பதினைந்து இலட்சத்திற்கும் அதிகமானோரும் அகதிகளாக இருக்கின்றார்க்ள்.
இச் சூழலில், எப்படி அகதியாக்கப்பட்டோம் என தன் பிள்ளைக்குச் சொல்லும் பெற்றோர் மண்ணுக்கு மேல் அரிதாகவே இருக்கிறார்கள். 2007 டிசம்பர் 08 அன்று முன்னாள் மறுவாழ்வுத்துறை ஆணையர் திரு. கற்பூர சுந்தரபாண்டியன் அவர்கள் ஆயத்த ஆடை உற்பத்தி மையம் ஆரம்பம் மற்றும் தையல் இயந்திரம் வழங்கும் விழாவிற்காக முகாமிற்கு வந்திருநதபோது, நீங்கள் அகதிகளாக இந்தியா வந்து அடுத்த ஆண்டு (இந்த ஆண்டு) இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளிவிழா.........என சொன்னஉடனேயே முகாம் மக்கள் வேகமாக கைதட்டினார்கள்; ஏதோ மகிழ்ச்சியான செய்திபோல. அதிர்ந்துபோன ஆணையர் இந்த ஆண்டிலாவது நீங்கள் உங்கள் நாட்டிற்குத் திரும்பும் நல்லது நடக்கட்டுமென தொடர்ந்து பேசினார். அன்னிய நாட்டில் நம் பிழைப்பு இப்படித்தான் சிரிக்கிறது.
‘தமிழ் மாணவர் பேரவை’, ‘தமிழர் இளைஞர் பேரவை’ என இணைந்திருந்த மாணவ, மாணவிகளைக் கொண்டிருந்த வீர வரலாறு நமக்கு இருக்கிறதென்றாலும் முகாம்களில் படித்த, படிக்கும் மாணவ மாணவிகள் எத்தணைபேர் இன்றும் இணைந்து நற்செயல் செய்கின்றார்கள், வரலாற்றைத் தேடிப் படிக்கின்றார்கள் என கதைத்துப் பார்த்தால் தோள் நிமிர்த்திய நம்மால் தலை நிமிர்த்தவே முடிவதில்லை. உரிமைக் குடிமகளாஃனாய் பிறந்து அகதியானவர்களே மண்ணுலிப் பாம்பாக வாழும்போது, அகதியாகப் பிறந்த விடுதலை முகாமின் வீரச்சிறார்களை என்னவென்று சொல்லுவது.
வீரமண் பெற்ற வித்துக்களே, இந்த ‘வெள்ளி விழா’ ஆண்டிலிருந்தாவது வரலாறு படிக்க, கேட்க, எழுத உங்கள் குழந்தைகளை, ஆர்வப்படுத்துங்கள், மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள் இல்லையென்றால், எதிர்காலம் உங்கள் பிணக்குழிகளையும் தோண்டும், எச்சரிக்கை.
தோழமையுடன்
அருட்சகோதரர் சூ. ம. செயசீலன்

காத்திருப்பு

தமிழினி
வெல்கம் காலனி
சென்னை


உயிர்தப்ப ஊர்விட்டு
பிழைத்த கொடுமை
அறிவூட்டி அனாதையாக்கப்பட்ட
எம்மூர் பள்ளிக்கூடங்கள்
கொள்ளையடிக்கப்பட்டு
கொலையுண்ட
சுற்றத்துக்சகோதரன்
வளம் நிறைந்த
ப+மியில்
விளைந்துகிடந்த
பட்டினிச்சாவுகள்
இப்படி
துளித்துளியாய்
சிதைக்கப்படுகின்ற
எம் தேசம்
மறுகன்னத்தை காட்டி காட்டியே
அலுத்துவிட்டது
இனி
கொஞ்சம் பார்த்துதான்
கால்வைப்பார்கள்
அடிப்பட்ட பாம்புகள்
பல காத்திருக்கின்றன.

--------------------------------------------

நாளைய விடியல்

நேற்று என்பது இறப்பு
இன்று என்பது இருப்பு
நாளை என்பது பிறப்பு
பிறகு ஏன் வாழ்வின் மீது இந்த வெறுப்பு
முயற்சி செய்
வெற்றி உன் விலாசம் தேடி வரும்

சிவனேஸ்வரி
லோனாவிளக்கு

எங்கள் தழிழ்

இயல் இசை நாடக முத்தமிழே
எங்கள் இதயங்கள் பாடும் இன்மதழிலே
ஆதியில் ஆண்ட தமிழ் மொழியே
இன்னும் ஆண்டு சிறக்கும் பொன்மொழியே
மெல்லிய இசையில் உன் புகழை
நம் ஒளவையுடன் பாக்கள் பாடியது
கம்பனின் கவியும் வள்ளுவன் குரலும்
நம் தமிழினை சிகரமாக்கியது
தாய் மடி இன்பம் தருகின்ற அன்னை
தேன் சுவை கொள்ள வைத்திடும தமிழே
கானக மயிலின் தனிப்;புகழ் போலே
காத்திடுவோம் எங்கள் தமிழ்மொழித் தாயை
வீரத்தின் கவியே பாரதி இனிதாய்
உலகத்தின் முடிவாய் வாழ்ந்திடு மொழியே
இன்றின்றி என்றும் வாழிய தமிழே!

சில்வர்ஸ்டார்
ஒக்கூர்


-----------------------------------------------

Monday, August 18, 2008

நண்பன்

தயானன் கோணேஸ்வரன்
லேனாவிளக்கு

உயிர் நண்பனுக்கு உயிரைக்
கொப்பது எளிது ஆனால்
உயிரைக் கொடுக்கும் அளவுக்கு
நண்பன் கிடைப்பது அரிது

------------------------------------------

வாழ்வு செழித்திட கல்வியோடு வாழ்க்கை நெறி தேவை

ஈழகவிதாசன். மா. ஞானசூரி
எடுப்பு: வாழ்க்கையானது செழித்திட கல்வி மட்டுமிருந்தால் போதாது. வாழ்க்கையின் நெறிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். கல்விநெறி இல்லாமல் வாழ்க்கைநெறி சிறப்படைந்ததாக இதுவரை எவரும் கூறியதில்லை அதேபோல் வாழ்க்கை நெறியின்றி கல்விநெறி சிநப்புற்றதாகவும் கூறியதில்லை. சரியான விகிதத்தில் உணவினை உட்கொண்டால் உட்கொள்பவரின் வாழ்நாள் நீடிக்கின்றது. அதுபோல் இருநெறிகளையும் சரியான விகிதத்தில் பெற்றுக்கொண்டால் அந்த வாழ்வு தேவலோகத்தின் அமிழ்தத்தின் இனிமையை விடஇ எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தினை விடஇ தஞ்சையின் பசுமையை விடஇ இனிமையாகஇ உயர்வாகஇ பசுமையாக செழிப்புடன் வளரும்.
தொடுப்பு: கல்விநெறிஇ வாழ்க்கைநெறி இவ்விரண்டும் வாழ்வு செழிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
1. கல்விநெறி:
“ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” (புறம்)
ஆசிரியரை வழிபடுவதனின்றும் தவறாது கல்வியினைக் கற்றல் வேண்டும். கல்வி அறிவை வளர்க்கும் ஒரு சாதனம். கல்வி ஒரு அறிவுப்பெட்டகம். ஆதை அனைவரும் பருக வேண்டும. கல்வியினை தவறாது கற்றல் நன்று என்று புறநானூறு கூறுகிறது. ஆகவே கல்விநெறி வாழ்வு செழிப்படைவதில் ஒன்றாகிவிட்டது.
2. வாழ்க்கை நெறி:
“ பண்புநெறி நட்புநெறி --- மனித நேயம்
நன்றியறிதலோடு நல்லொழுக்கம் - இவை
ஜந்நெறியும் ஒருங்கேபெற்றால
வாழ்வு செழிப்பாகிடும்” (புதுக் கவிதை)
இந்த ஜந்நெறியும் வாழ்க்கை நெறிககு அவசியமென புதுக்கவிதை ஒன்று சுட்டுகின்றது.
பண்புநெறி: கல்விநெறியுடன் பண்புநெறியையும் கற்றுக்கொண்டதால் பண்டைத் தமிழர்கள் ‘பண்புடையோர்கள்’ என போற்றப்படுகின்றனர். ஒரு நாட்டில் வாழும் மக்களின் பண்பு நெறியினால்தான் அந்நாடு சிறப்பாக பேசப்படும். பண்புநெறி விலங்புகளுக்கும் இ மனிதர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் காட்டுகின்றது.
“ பாடறிந் தொழும் பண்பினாரே” (புறம்)
உலகத்தாரோடு இணைந்து வாழும் மக்களை பண்புடையவர்கள் என புறநானூற்றுப் பாடல் கூறுறகிறது.
“அரம்போலும் கூர்மைய ரேனும்மரம் போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்” (குறள்)
என பண்பில்லாதோரை மரத்துக்கு ஒப்பாக வள்ளுவர் சாடுகிறார்.
இசையில்லாத பாடல் சிறப்பாக அமையாது. அதுபோல் பண்பாடு இல்லாத மனிதர்களும் சிறப்பாக பேசப்படமாட்டார் என்பதற்கு இக்குறள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.
“ பண்என்னாம் பாடற்கு இவையபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இலாத கண்” (குறள்)
தமது தலையில் நரை தோன்றாமைக்கு தாம் வாழும் ஊரில் பண்புடையோர்கள் பலர் வாழ்வதே காரணமென பிசிராந்தையார் கூறுவதிலிருந்து பண்புநெறியின் சிறப்பும் அவசியம் புலப்படுகின்றது.
2. நட்பு நெறி: : நட்பு மனிதப் பண்பாடுடன் கலந்துவிட்ட ஒரு வாழ்வியல் நெறி. மனிதநேயம் மலர நட்பு ஒரு சிறந்த வழிகாட்டி தனிமனிதன் சமுதாயத்தோடு இணைவகற்கு நட்பு உதவி செய்கின்றது வாழ்க்கை நெறியில் நட்புநெறி தனியொரு சிறப்பைப் பெற்றுள்ளது. வள்ளுவர் தமது குறளில் நட்புக்கு இலக்கணம் வகுத்து தனிஒரு அதிகாரத்தை நட்பு நெறிக்காக எழுதியிருப்பது நட்பின் நெறிப்பாட்டைக் காட்டுகின்றது.
“உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள்)
இக்குறள் நட்பின் நெறிப்பாட்;டை உயர்த்திக் காட்டுகிறது.
பண்டைத் தமிழர்கள் தம்கண்போல் நண்பரை மதித்தனர். அவர்களுடன் கலந்து பழகிப்பெறும் மகிழ்ச்சியை இனியதாகக் கருதினர்.
“ முந்தை யிலிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்;” (நற்றி)
என்ற நற்றிணைப் பாடலடி நட்பினை மதிக்கும் மனப்பான்மையையும் நண்பர்களின்பால் கொண்ட நன்னம்பிக்கையையும் உயர்த்திகின்றனர். இதே நட்பினை நாலடியாரும்
“ சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டார் எனப் படு வார்” (நாலடி)
என்ற பாடல் மூலம் நட்புநெறியை உணர்த்துகிறாhர்.

“ உலகம்………. ஃ இன்பமுடன வாழவும் ஃ அன்புடன் வளரவும் ஃ அமைதி நிலைபெறவும் மனிதா ஃ ஈயடா பெட்டவுடன் ஃ நன் நட்பே!” (புதுக்கவிதை)
3. மனித நேயம்: மனிதரின் உள்ளத்தின் அடிமனதிலிருந்து வெளிப்படுகின்ற உண்மையான அன்பே மனிதநேயம் ‘ நேயம்;’ என்பது நாம் வாழ்வதற்கும் பிறரை வாழ்விப்பதற்கும் அடிபடையான பண்பாகும். மனிதநேயம் என்பது இனம் நாடு மொழி என்ற எல்லைகளுக்கட்பால் உயர்ந்து நிற்கும். மனிதநேயம் பற்றி சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனார்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
உலகம் ஒன்றே உலக மககள் அனைவரும் உறவினர் என்று கூறுகின்றார்.
வேடர்குலத்தில் பிறந்தவனையும் இ வாரைகுலத்தில் பிறந்தவனையும் இ அரக்ககுலத்தில் பிறந்தவனையும் இ இராமன் தனது சகோதரர்களாக ஏற்றுக்கொண்ட மனிதநேயப் பண்பாட்டை மனிதநேயம். சகோதரத்துவமாக மலர்ந்ததை கம்பராமாயணம் யுத்தகாண்டத்தில் விளக்கி காட்டியுள்ளது மனிதநேயத்தின் சிறப்பை சுட்டிக்காட்டுகின்றது.
“ மதவெறி பூசலை ஃ நிறுத்திப் பார் ஃ மாதம் மும்மாரி பொழியும் ஃ இனவெறியை இடித்துரைத்துப் பார் —நீ ஃ இகழ்ந்தவருடன் நேசம் ஃ வளர்வது காண்பாய் மனிதா!” (புதுக்கவிதை)
3. நன்றியிதல்: பிறர் செய்த நன்மையை மறவாது வாழும் பண்பு நன்றியறிதல் எனப்படுகின்றது. நன்றியறிதல் என்பது ஒருவர் நமக்குச் செய்த நன்மைக்கு ஈடாக மீண்டும் நன்மை செய்வதல்ல. தகுந்த காலத்தில் பயன் கருதாது நமக்கு நன்மை செய்யாதவருக்கும் நாம் நன்;மை செய்தலே நன்றியறிதல் ஆகும். சங்ககால மக்கள் நன்றிக்கடனை போற்றி வளர்த்தனர் நன்றி மறத்தலை தீமை என்று கருதினர் ஆன்முலையறுத்தல் கருச்சிதைத்தல் அந்தணர்க்கு கொடுமை செய்தல் இவற்றையெல்லாம் விட மிகப்பெரு;ங கொடுமை நன்றி மறப்பதே என்று புறநானூறு எனும் நூல் கூறுகின்றது.
தன் துன்பத்தில் உதவிய ஒருவற்கு உதவாது செய்ந்நன்றி மறந்தானின் செல்வம் தானாகவே கெட்டழியும் அவன் நரகத்தின்கண் செல்வான் என்று வள்ளுவர் கூறுகிறார்.
“ எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள்)
தமக்கு ஒருவர் உதவி செய்தால் அவருக்கு எவ்வகையிலாவது கைம்மாறு செய்திட வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பெருமையாகக் கருதியவர்கள் நம் முன்னோர்கள் இதனை
“ முன்னொன்று தகக்காற்றி முயன்றவர் இறுகிக்கண்
பின்னொன்று பெயர்தாற்றும் பீடுடையாளர்” (கலித்)
என சங்க இலக்கியமான கலித்தொசை எடுத்துரைக்கின்றது.
3. ஒழுக்கம்: ஒழுக்கமுடைய வாழ்Nவு சிறந்த வாழ்வு உயர்ந்த வாழ்வு. அறிவும் ஒஐக்கமும் உடைய சான்றோர்களின் ஒழுக்கலாறுகளை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வதே மனிதருக்குரிய கடமையாகும் ஒழுக்கநெறி தவறியோரின் வாழ்வு சிறப்படைந்ததாக சரித்திரம் இல்லை.
மணிஇ பொன் இ முத்து இவற்றிலான அணிகலன்கள் பழுதடைந்தால் சரிசெய்து கொள்ளலாம். ஆனால் ஒழுக்கம் எனும் நெறியானது பழுதடைந்தால் அவற்றை சரிசெய்வதென்பது இயலாதகாரியம் ஆகும்.
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும் (குறள்)
ஒழுக்கம் மேன்மையையும் இன்பத்தையும் நல்வல்லது. நல்லொழுக்கம் நன்மைக்கு வித்தாக அமையும். தீய ஒழுக்கம் பழியையும் துன்பத்தையும் தரும் என்கிறார் வள்ளுவர்.
“கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை” (தொல்)
ஒழுக்கநெறியை உள்ளத்தில் அமைத்து அறநெறியில் நிற்றல் வேண்டும என்று கூறுகின்றது தொல்;காப்பியம் நல்லொழுக்கம் பண்பட்ட வாழ்வியல் நெறியாகும்.
முடிப்பு:
இவை ஜந்நெறியும் வாழ்க்கை நெறியின் ஜம்புலன்கள். இதில் ஏதேனும் ஒரு புலன் கெட்டுப்போனால் அவன் முழு மனிதனாக முடியாது. ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்கு இவை ஜந்நெறிகளும் இன்றியமையாதவைகள்.
கல்வியில்லாத வாழ்க்கைநெறி துடுப்பு இல்லாத படகிற்குச் சமமாகும். வாழ்க்கை நெறியின்றி வெறும் கல்வி மட்டும் பெறுதல் சிறகு இல்லாத பறவைக்குச் சமமாகும். படகானது கரைசேர துடுப்பு மிக அவசியம். அதுபோல் மனிதன் தனது அறிவை வளர்த்துக் கொள்வதற்கு கல்வி மிக அவசியம். பறவையானது உயரே பறப்பதற்கு சிறகு மிக அவசியம் . மனிதனும் தனது வாழ்க்கையில் உயர்ந்து நிற்பதற்குமம் பிறரோடுஇ பழகுவதற்கும் வாழ்க்கைநெறிகள் இன்றியமையாததாகின்றது. எனவே ஒவ்வொருவருடை வாழ்வும் செழிப்படைவதற்கும் உயர்ந்து விளங்குவதற்கும் கல்வியோடு வாழ்க்கைநெறியும் அவசியமே.

“ சங்கே முழங்கு! ஃ வானுலகம் வாழ்த்திடவும் ஃ வையகம் போற்றிடவும் ஃ வளமான வாழ்வக்கு —— கல்வியோடு ஃ வாழ்க்கைநெறி தேவையெ ஃ சங்கே முழங்கு!” (புதுக்கவிதை)
குறிப்பு:2004 இல் சென்னை தெய்வத் தமிழ்ச்சங்கம் நடாத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது

ஈழத்து காந்தியின் சிறப்புகள்

(தந்தை செல்வா)

செல்லமாக ஒரு செல்வா
சிறப்புற பாரினிலே
செழிப்புடனே வாழ்ந்தாரைய்யா
செவியின்பம் குறைந்திடினும்
செப்புகின்ற சொல்வன்மை
திறமுற பெற்றாரைய்யா
செழிப்புற ஒரு
தேசியம் காண எண்ணி
முழுமுச்சாய் உழைத்தாரைய்யா
இலக்குமிகுந்த உரிமைகள்
இன்னதென்று எடுத்துரைக்க
பாராளுமன்றமும் சென்றாரைய்யா
விடுதலைக்கு மார்க்கமுண்டு
என்றிருக்க
நம் தந்தையை காலதேவன்
வந்தணைத்துக் கொண்டானையா
தூர் அதிஸ்ட வசத்தாலோ
தூயவரை நாமிழந்தோம்
விடிவுகாண அவர் ஆன்மா
நம்மூடனே இருக்குதைய்யா

பி.ப யோகா
வாழவந்தான் கோட்டை

சுதந்திர தேசம் படைப்போம்

ம. மரியசெல்வி
வாழவந்தான் கோட்டை


பசுமையான இயற்கையில்
இன்னிசை பாடும் பறவைகளே
கடலில் துள்ளி விளையாடும்
மீன்களே
சுதந்திரமாக பறந்து
திரியும் சுதந்திர பறவைகளே
என்னை போல்
உன்னை கூட்டிற்க்குள்
அடைத்தது யார்?
கடலின் ஆழத்தில் மூழ்கி
இருவரும் சேர்ந்து
கூட்டை விட்டு
சுதந்திரமாய் பறந்து செல்வோம் வா
சூரிய ஒளியை எதிர்த்து
வெப்பக் கடலில் நீந்தி
சுதந்திரமாய் வாழ
சுதந்திர தேசத்தை படைப்போம் வா

---------------------------------------------

நாவலர் மன்றம்

(நாவலர் உள்ளே வருகிறார்)
மாணவர்கள் :வணக்கம் நாவலரே!
நாவலர் :வணக்கம். தோரணமெல்லாம் கட்டி நாவலர் மன்றமே கலைகட்டிருக்கு.
தமிழினி :ஓம் நாவலரே, நம் வேர்விடும் நம்பிக்கை இதழ் 29.07.2008 அன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதுதான் இந்த ஆரவாரம்.....
நாவலர் :ஓம். நம் வேர்விடும் நம்பிக்கை இதழினால் இந்த ஓராண்டிலே பலபேர் எழுத்தாளராக உருவாகியிருப்பதை நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. சரி, இந்த மாத எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்வோமா?.
பூங்குன்றன் :ஓம். கே.கணேஷ் அவர்களின் பெற்றோரும், மூதாதையரும் திருச்சி மாவட்டம் தத்தமங்கலம் என்ற சிற்றூரில் இருந்து இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள். மலையகத் தமிழர்கள். கண்டியை அடுத்துள்ள அம்பிட்டிய என்னும் இடத்தில் உள்ள தலைப்பின்னாவ என்னும் தோட்டத்தில் தான் கே.கணேஷ் அவர்கள் பிறந்தார்.
பூவிழியாள் :நாவலரே அய்யா அவர்கள் 02.03.1920 அன்று திரு.கருப்பண்ணன்-திருமதி வேளுரம்மாள் அவர்களின் மகனாகப் பிறந்தவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சித்திவிநாயகம். வீட்டில் அழைத்தப் பெயரே நிலைத்துவிட்டது. தோட்டத்து எல்லையிலிருந்த பெண்கள் பள்ளியில் சிங்கள மொழியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். ஆனாலும் அவரது அம்மா தேவார திருவாசகங்கள், நீதி நூல்கள் ஆகியவற்றைக் கற்றுத்தந்ததோடு தமிழ்நாட்டில் இருந்து அஞ்சல் வழியாக பல நூல்களைப் பெற்று படிக்க வைத்துள்ளார்.
நாவலர் :ஆகா.....ஆரம்பமே படு வேகமாக இருக்கு.....

கனியன் :ஓம் நாவலரே, இடைநிலைக் கல்வியை புனித அந்தோனியார் கல்லூரியில் ஆங்கிலத்தில் படித்துள்ளார். ஆனாலும் தமிழ்மொழியில ஆர்வம் இருந்ததால 1934 ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச் சங்கம் வந்து தமிழ் கற்றிருக்கார்.
நாவலர் :மிகச் சரியாச் சொன்னீங்க....இந்தியாவுல இருந்தபோது, ஜெய்;ப்பிரகாஷ் நாராயணன் எழுதிய “அபேதவாதம் ஏன்?” (றூல ளழஉழைடளைஅ?), ஜவஹர்கலால் நேரு எழுதிய “இந்தியா எங்கு செல்கிறது” (றூiவாநச ஐனெயை), சுபாஷ் சந்திர போஸ் எழுதிய “சாம்ய வாதம்” ஆகிய நூல்களை வாசித்து இடதுசாரிக் கொள்கையில் ஈடுபாடு கொண்டார். அபேதவாதக் கட்சியில் ராமண்ண சாஸ்திரியுடன் அய்யாவுக்குத் தொடர்பு இருந்ததால் இந்திய ரகசிய காவலர்கள் தமிழ்ச்சங்கத்தில் சென்று விசாரித்திருக்கிறார்கள். அவ்வளவுதான் கல்லூரியிலிருந்தே நீக்கிட்டாங்க..
குழலினி :அப்படியா.....படிப்பு பாதியிலே போயிருக்குமே.....
நாவலர் :இல்ல...இல்ல....திருவையாறு அரச கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்து விட்டு 1938-ல் இலங்கைக்குத் திரும்பி வந்துவிட்டார். சிங்களம், தமிழ், ஆங்கிலம், கற்ற கே.கணேஷ் அவர்கள் தமிழ் எழுத்துலகத்திற்கு நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
பனிமலர் :ஓம் நாவலரே... தமிழ்நாட்டில் இருந்த ஆனந்த போதினி என்ற இதழில் 1932-ல் முதன் முதலில் அறம் செய்ய விரும்பு என்று கட்டுரை எழுதியவர், டாக்டர் வரதராஜ் அவர்களின் தமிழ்நாடு வார இதழிலும், 1935-ல் மாதர் மறுமணம் என்ற இதழிலும், சென்னையில் வெளியான லோக சக்தி, மணிக்கொடி, போன்ற இதழ்களிலும் எழுதியுள்ளார்.
நாவலர் :நிறைய தகவல்களைச் சேகரித்துள்ளீர்கள் நன்றி. மேலும், கலா மோகினி, கிராம ஊழியன், சிவாஜி, சக்தி, ‘னுமான், ‘pந்துஸ்தான் ஆகிய இதழ்களிலும் எழுதியுள்ளார்.
மகிழன் :கே.கணேஷ் அவர்கள் தனது சொந்தப் பெயரிலும், சித்தார்த்தன், கே.ஜி, மலைமகன், கலாநேசன், கணேசு ஆகிய புனைப்பெயரிலும் எழுதியுள்ளதாக எங்கள் மாலைப் பள்ளி ஆசிரியை சொன்னாங்க நாவலரே...
நாவலர் :உண்மைதான். அய்யா அவர்களின் எழுத்துப் பணிகளில் முக்கியமானது பிற மொழி இலக்கியங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்த்தது என்றால் மிகையில்லை.
அகலிகை :அய்யாவின் மொழி பெயர்ப்பைப் பற்றி சொல்லுங்க நாவலரே!
குழலினி :நாவலரே நான் சொல்றேன். அய்யா அவர்கள் மொழி பெயர்த்த ஒரே நாவல் தீண்டாதவன் (ருவெழரஉhயடிடநள) (1947). மேலும் அஜந்தா(1964),அந்த கானம்(1974), இளைஞன் எர்கையின் திருமணம்(1990), கூனற் பிறை(1990), உடலும் உணர்வும்(1992) ஆகிய அய்ந்து குறு நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டு நூலுருப் பெற்றுள்ளன. உடலும் உணர்வும் நூலில் ஒரு மந்தையோட்டியின் கதை, ஒரு பாரப்பேருந்து ஓட்டுனரின் கதை என இரண்டு குறு நாவல்கள் இணைந்துள்ளன.
நாவலர் :அமைதியா இருக்கீங்க கைதட்டி பாராட்டுங்க......(எல்லாரும் கைதட்டல்). ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு குழலினி. அய்யா அவார்களின் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. யாராவது சொல்றீங்களா.....
மகிழன் :நான் சொல்றேன். வட இந்திய எழுத்தாளரும், அகிழ இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவருமான கே.ஏ.அப்பாஸ் அவர்களின் பத்து சிறுகதைகளை மொழிபெயர்த்து குங்குமப் பூ(1956,1963)என வெளியிட்டார். லூசுன் என்ற சீன எழுத்தாளரின் சிறுகதைகளை மொழிபெயர்த்து போர்க்குரல்(1981), சீன எழுத்தாளர் லூசுன் சிறுகதைகள்(1988), பிறகு இவை இரண்டையும் இணைத்து சீன அறிஞர் லூசுன் சிறுகதைத் தொகுப்பு(1995),மற்றும் மூங்கிற் பள்ளம் (வியட்நாமியச் சிறுகதைகள்,1992) ஆகியன வெளியிட்டுள்ளார்.
நாவலர் :பாராட்டுக்கள்.....பாராட்டுக்கள்....(எல்லோரும் கைதட்டுதல்). கணேஷ் அவர்களின் மொழிபெயர்ப்பு கவிதைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. யாரு சொல்றா....
பூவிழியாள் :நான் சொல்றேன் நாவலரே. N‘hசிமின் சிறைக் குறிப்புகள்(1973,1985), பல்கேரியக் கவிதைகள்(1984), ஒரு சோவியத் கவிஞனின் புதுக்கவிதைகள்(1989), எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே(1988), பாரதி பக்தன் பார்பரா கவிதைகள்(1989), உக்ரேனிய மகாகவி தராஸ் ஷெவ்சேன்கோ கவிதைகள்(1993), உக்ரேனிய அறிஞர் இவன் ஃபிரான்கோ கவிதைகள்(1994) போன்றவைகள் அய்யா அவர்களின் மொழிபெயர்ப்புக் கவிதை நூல்கள் நாவலரே.
நாவலர் :ரொம்ப மகிழ்ச்சி. பாராட்டுக்கள். (எல்லோரும் கைதட்டுதல்).கே.கணேஷ் அவர்கள், இன்றைய எனது கடமைகள்(1990), மகிழ்ச்சிமிகு குழந்தைகள்(1986), சொந்த வேலையில் சுகம்(1990) மற்றும் ஷிகானும் நத்தையும் என நான்கு சிறுவர் இலக்கிய நூல்களும் மொழிபெயர்த்துள்ளார். இதைத் தவிர்த்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் நிறைய எழுதியுள்ள கணேஷ் அவர்கள் இந்தியாவில் ‘தென்றல்’, ‘நவசக்தி’, ‘பாரதி’,போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார். நம் நாட்டு வீரகேசரி இதழில் 1949 இல் துணையாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
கனியன் :நம் தமிழ்மொழிக்கு மிகஉயரியத் தொண்டாற்றியுள்ள கே. கணேஷ் அவர்களை இந்த மாதம், அதுவும் வேர்விடும் நம்பிக்கை இதழின் இரண்டாம் ஆண்டின் முதல் மாதத்திலே அறிந்துகொண்டோம் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
நாவலர் :சரி, அடுத்தமாதம் நாவலர் மன்றத்தில் காப்பியங்கள் பல தந்த கவிஞர் ஜின்னா அவர்களைப்பற்றி தெரிந்து கொள்வோம். எல்லோருக்கும் நன்றி;.
மாணவர்கள் :நன்றி நாவலரே.

மாணவச் செல்லங்களே! கவிஞர் ஜின்னா‘; அவர்களைப் பற்றியத் தகவல்களைச் சேகரித்து அனுப்புங்கள்.

தாய்

பவித்திரா சுதா
லோனாவிளக்கு


ஜயிரண்டு திங்கள் தவமிருந்து
என்னைப் பெற்றெடுத்தவளே நெற்மணி கொண்டு
என் நெஞ்சைத் துடிப்பை நிறுத்திடாதே
கள்ளிப்பால் கொடுத்து கொல்லாமல் காத்தவளே!
பூவாய் இந்தப் பூமியில் என்னைப் பூக்கச் செய்தவளே!
எப்பிறவியில் தீர்ப்பேன் என் நன்றிக் கடனை

நட்பு

ம. மைக்கில் ராஜ்
வாழவந்தான் கோட்டை


நண்பா
வானத்தைப் பார்த்தேன்
நிலவைத் தேடி
கடலைப் பார்த்தேன்
அலையைத் தேடி
மழையைப் பார்த்தேன்
வானவில்லை தேடி
உன்னைப் அடைந்தேன்.
நட்பை நாடி

-----------------------------

அழியாத அகதிகள்

சியாம்சன்
ஒக்கூர்


என் இதய ஈழமே
என் உயிர் மூச்சு
என்று உன்னைச் சேரும்
என் விழிகள் தேம்பிய காலம்;
என்று மெல்ல மெல்ல போகும்
இந்த இந்திய தேசத்தில்
நாம் என்ன இரவல் மக்களா?
ஒரு பள்ளி செல்லாமலே
நமக்கென்ன அகதிப்பட்டமா?
ஒரு முற்றுப் புள்ளிக்குள்
முடிந்திடாத வார்த்தை போலவே
நம் முகவரி தொலைந்த
இந்த வாழ்க்கை தொடருமா?
அங்கு எரியும் ஈழத்தை
அனைத்திட மழை சாரல் போடுமா?
நம் அடிமை வாழ்க்கையை உடைத்திட
புது விடியல் பிறக்குமா?
என்னும் அழியாமல் தொடரும்
நம் அகதிப்பட்டம் அழியுமா?

------------------------------------------------

வெ. சாரதா

வாழ்க்கை என்பது போர்
அதில் வாழ்வது எளிது
வளர்வது கடினம்!
இழப்பு என்பது வறுமையிம் வறுமை
என் தாய் நாட்டை இழந்தது போல
பெண் என்பவள் தீயில் குத்து விளக்கு
கோபத்தால் அவள் ஆவாள் தீ விபத்து
பள்ளி எனும் பூங்காவில்;
பட்டாம் பூச்சி போல
கல்வி என்னும் பறவையில்
என்றும் பிரியாதது நம் நட்பு
இவையெல்லாம் இனைவது பல்சுவை
இதழ்
பல்சுவை இதழிலும் இனியது நம் இதழ்
அதை உயர்த்துவது நம் கடமை
தோழா ஓன்றுபடு
வாழ்வில் உயர்ந்து இழப்பை மீட்டு
பெண் வீரத்தை உணர்ந்து நட்பு என்னும்
பண்பை வளர்த்து நம் இதழை
உயர்த்துவோம் நாமும் உயர்வோம்


------------------------------------------

புலம்பெயர்ந்தோர் கவிதை

இளங்கவி ஈழபாரதியின்

புலம்பெயர்ந்தோர் கவிதைகள் பெரும்பாலும் ஈழம் சார்ந்து பேசப்பட்டு வந்தாலும் வாழ்வியல் தன்மைகளில் பொது நிலைகளையும் அரவணைத்தே வந்துகொண்டு இருக்கிறது. குறிப்பாக கவிஞர் பன்னீர் செல்வம் அவர்களின் “ ஒரு சாலையின் சரிதம்” மனித வாழ்வின் துன்ப நிலைகளின் சரித்திரமாகவே பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.“
தங்கச்சிக தலையெழுத்து
கரைசேரும் காலம் வரை
பூமியிலே நானொருத்தி
பூப்படைய வேணாமுங்க” !
இன்றைய காலகட்டத்தில் தொடரும் வரதட்சனை பிரச்சனைகளையும் வீட்டில் எல்லாம் பெண்குழந்தைகளாய் இருந்தால் ஏற்படும் வலி பிரசவ வலியை விட அதிகமானதுதான்.கவிஞர் பெண்ணியம் பற்றி மட்டும் அல்ல தலித்தியம் பற்றியும் குறிப்பிட்டு இருக்கின்றார்.
“எங்கள் ஊரில் இன்றுவரை
இரட்டைக் குவளை உண்டு
செருப்பணிந்த கால் மறுக்கும்
தெருக்கள் பல உண்டு
தீட்டுப்பட்ட மனிதன்
நுழையா திருக்கோயில்கள் உண்டு!”

இவ்வுலகில் மனிதராய் பிறக்கும் அனைவருமே உணவு உடை இருப்பிட் கல்வி இவைகளை நிறைவாகப் பெற்று வாழ உரிமை உண்டு என்று “இரண்டாம் வத்திக்கான் சங்கம்” நமக்கு பிரகடனப்படுத்தி இருக்கின்றது. அதே போன்று ஜ.நா. சபையும் அடிப்படை உரிமைகள் பற்றியும் மனித உரிமை மீதல்கள் பற்றியும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றது.
ஆலயங்களில் ஆண்டவணை வழிபடுவதற்குக் கூட சாதியின் பெயரால் தடை விதிக்கப்படுகின்றது. குறிப்பாக அரியனா மாநிலத்தில் பல்லாறுக்கு அருகிலுள்ள பத்ரம் என்ற கிராமத்தில் தலித் மக்களின் கோயில் ஒன்று உயர்சாதி அனத்தவர்களால் இடிக்கப்பட்டு உணவு கூட கொடுக்கப்படாமல் சித்திரவதைச் செய்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்த மட்டில் கண்டதேவி தச்சூர் ஆரண்கண்டிகை போன்ற இடங்களில் தலித் மக்களுக்கு வழிப்பாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டுமனித உரிமை மீறல்களின் உச்சம் எனலாம். இதைவிட கொடுமையானது இரட்டை குவளை முறை இன்னும் ஒரு சில இடங்களில் தொடர்வதுதான். கடலூர் மாவட்டத்தில் 16 கிராமங்களிலும் திண்டுக்கல் மாவட்த்தின் ஒரு சில இடங்களில் இன்னும் நடப்பில் உள்ளது. தந்தை பெரியாரின் போராட்டம் இன்னும் தொடர வேண்டியே உள்ளது.
உயர்சாதிப் பெண்ணை தலித இளைஞன் நேசித்தாலோ இல்லை தலித் இளைஞனை உயர்சாதிப் பெண் நேசித்தாலோ பாதிப்பு என்னவோ தலித் இளைஞனுக்குத்தான்.
தாழ்த்தப்பட்ட மக்களின் கூட்டத்திற்கு மலம் திணிப்பது நிர்வாணமாக்குவது என்று இன்னும் தொடர்கிறது. சாதிய ரீதியான வன்முறைகளும் அடக்குமுறைகளும் இந்த வலி கவிஞரின் கவிதையிலும் இப்படி….
“ காதலர்கள் வாயில்
மலத்தைத் திணிப்பதா
அல்லது
பெற்றவர்களை நிர்வாணமாக்கி
ஒடவிடுவதா
இல்லை இவர்களை
ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதா?
சாதியப்பாகுபாடுகள் தமிழகத்தில் தலைதூக்கி இருந்தாலும் ஈழம் மற்றும் தமிழகப் புலம்பெயர்வு மக்களை பொறுத்த வரையில் போராட்ட வாழ்வில் சாதியம் தொலைந்து போனாலும் முழுமையாக ஒழிந்துவிட்டது எனக் கூறிவிட முடியாது.
ஒரு கவிஞரின் கைக்கூ இப்படி விரிகிறது.
“கணிணி யுகத்திலும்
கல்யாணப் பேச்சில்
ஜாதி”
புலம்டிபெயர்ந்த மக்கள் மத்தில் சாதிய வேறுபாடுகள். இல்லை என்று கூறி விட முடியாது கல்யானப் பேச்சில் இருக்கத்தான் செய்கிறது. அதே வேளை ஈழத்தில் ஏதேனும் ஒரு மாவட்டத்தின் கிராமங்களில் தனிச் சமூகமாக வாழ்ந்தவர்கள் இங்கு ஒன்றாக கலந்து ஒரே சமூகமாக வாழ்வது இடம் பெயர்வின் நன்மைகள் என்றே கூறலாம்.
முனித உரிமை மீறலில் முதலிடம் வகிக்கும் நாடு “ இலங்கை” என்று தற்போது ஊலக நாடுகள் தெரிவித்து வருகின்றது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் இங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து துன்பங்களையும் மனித உரிமை மீறல் என்றே குறிப்பிடலாம்.
ஊலக அகதிகளுக்கான ஜ. நா. சபையின் ஒப்பந்தத்தில் இந்தியா கையொழுத்து (ஒப்பந்தம்) இட்டு இருந்தால் மனித உரிமை மீறலுக்கான நிலைப்பாடு குறித்து உலக நாடுகளும் ஜ.நா.(அகதிகள் பிரிவு) சபையும் ஒருவேளை பேசியிருக்கலாம். போர்கால சூழல் காரணமாக புலம்பெயர்ந்த அகதிகளை தனது நாட்டுக் குடிமக்களுக்கு மேலாக பாதுகாக்க வேண்டும் என்பது ஜ.நா. சபையின் வேண்டுகோள் என்பதையும் இங்கு மறந்து விட முடியாது.
வலியோடு தொடர்வோம்

--------------------------------------------

பேரழகு

சியாமினி
ஒக்கூர்


மழலைச் சிரிப்பு
மயங்க வைக்கும் நிலா
கைகளில் சிரிக்காத தென்றல்
தாயின் எல்லையற்ற அன்பு
தந்தையின் கருணை உள்ளம்
சகோதரனின் சீண்டல்
காதலனின் குறும்பு
இவற்றோடு இணைந்த
தோழனின் அரவணைப்பு
இறைவனின் படைப்பில்
இவையாவும் பேரழகு!

------------------------------------------------

மண்ணும் மறத்தமிழும்

-- ஈழக்கவிதாசன் மா.ஞானசூரி
அறந்தாங்கி


மண்ணின் மணத்தினை
மறந்து போய்விடுவோமோ?
பல ஆண்டுகளாய்
அகதி வாழ்க்கையில் - ஈழ
மண்ணின் மணத்தினை
மறந்து போய்விடுவோமோ?

யாழ் மண்ணின்
கதகதப்பும்
வன்னி மண்ணின்
தகதகப்பும்! - எமது
அடுத்த தலைமுறைகள்
அனுபவிக்க வேண்டுமே!

ஈழ மண்
ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல -
உலகத்
தமிழினத்திற்கே அடையாளம்
எங்கள் அடையாளத்திளை
பறிக்க எவர்வந்தாலும்
பொங்கியெழத் தயங்கோம் -
கயவர்களை
பொசுக்காது திரும்பிவரோம்!
இறைவா!
சுதந்திர உணர்வையும்
சுத்தமான தழிழையும் - எமக்கு
குன்றாது கொடுத்தருளும்!
மண்ணும் மறத்தமிழும்
மாசில்லாது வாழட்டும்!

-----------------------------------------------

பெண்மை வெல்க

ச. சதீஸ்
லோனாவிளக்கு


கல்வி வளரஒரு கலைமகளை கைநிறையச்
செல்வம் பெருக்க ஒரு திருமகளை நாடியவன்
நதிகளையும் தான்பிறந்த நாட்டினையும் பெண்பாலம்
மதித்துப் பெயர்சூட்டி மனமுருகிப் பாடியவன்
அன்புக் காட்டுவதில் ஆத்ம சுகமடையம்
பெண்னை உணராமல் பெரும்பாடுபடுத்துகிறான்
எல்iலையிலாக் கொடுமைகளை எத்தனைநாள் - தாங்குவது
ஆர்தெழுவோம் பார்த்திடுவோhம் இனியார்கை ஓங்குவது
கொல்லட்டும் எனத்தலையைக் கொடுத்ததெலாம் - போதுமினி
வெல்லட்டும் பெண்;மை என விழித்தரல் கேட்கிறது

--------------------------------------------

Thursday, July 10, 2008

விளையாட்டு

```````````````````````````````````````````````````````
விடுதலை முகாமின் வீரச்சிறார்களே!
இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டின் ஒருநாள் கல்லூரி மாணவர்களின் கூட்டம் திருச்சி, வாழவந்தான் கோட்டை முகாமில் நடந்தது. பலவாறு விவாதித்தவர்களிடம் தன் நாடு பற்றிய புரிதல் எப்படி உள்ளதென நாடிபார்த்து உரையாடல் தொடர்ந்தேன். அமர்வு முடிந்து வெளியேறியபோது திருச்சி, கொட்டப்பட்டு முகாமின் மாணவர் தனியே கேட்டார். ‘இலங்கை துடுப்பாட்ட அணியை நாம் ஆதரிப்பது என்பது இலங்கையை ஆதரிப்பதற்கு சமம்தானே. இத்தனை ஆண்டின் வீர இழப்புகளும் இது போன்ற ஆதரிப்பினால் வேரிழந்து போகாதா?’.
மொழி, பண்பாடு, வணப்பு, தட்ப வெப்பம், இன உணர்வு, உணவு முறைகளைப் போலவே விளையாட்டுக்களும் இனத்திற்கு இனம் தனித்துவமாய் மிளிரக்கூடியவைகள். விளையாட்டுக்கள் ஒற்றுமையின் அடையாளம். ஒரு நாடு தன் தேசியத்தை வளர்த்தெடுக்கவும், ஒற்றுமையை உலகறியச் செய்யவும் உதவுபவை. மனவலி போக்குவதும், பக்குவப்படுத்துவதும், ஆரோக்கியம் தருவதும் விளையாட்டுக்கள்.
சாக்கு ஓட்டம், தவளைப் பாய்ச்சல், ஆடுபுலி ஆட்டம், கிட்டி அடித்தல், பல்லாங்;குழி என விதவிதமான விளையாட்டுக்களை ஆடிய அனுபவம் நமக்கும் உண்டு. துள்ளி வரும் காளை அடக்கி வீரம் மெய்ப்பித்தவர்கள் நாம். தனித்துவம் கொண்ட நம்நாட்டு கைப்பந்து முறையை அடுத்தடுத்த தலைமுறைக்கும் மடைமாற்றம் செய்து தொடர்ந்து ஒளிர்பவர்கள் நாம். உலகக்; கைப்பந்து முறைமைகளையும் கற்றுக்கொண்டு தடம்பதிப்பதிலும் சலைத்தவர்கள் அல்ல.
ஆனால் சிலகாலமாகவே, இறக்குமதியான துடுப்பாட்டத்தை மிகப்பலரும் உயிர்காக்கும் இரத்தமாக, நீராக, உணவாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பள்ளி செல்பவர்கள்கூட சிந்தனை வளர்க்கும் நல் நூல்கள் படிக்கவும், தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் நேரம் இல்லையெனச் சொல்லி துடுப்பாட்டம் காண்கிறார்கள். மட்டையும் பந்துமாக கறுத்துப்போகிறார்கள். ஆண்டில் பலநாட்கள் முடங்கிப்போகிறார்கள்.
ஈழத்தின் தேசிய விளையாட்டு (கிள்ளித்தட்டு) எது, எப்படி எனத்தெரியாது போட்டியில் கலந்துகொண்டு ஆட்டத்தின் இடையே அடிக்கும்போது ‘ஏம்பிள்ளை என்னை அடித்தாய்?’ என அறியாமை வெளிப்படுத்தியதும் நிகழ்ந்திருக்கிறது. (நாகரீகம் கருதி முகாம் பெயரைத் தவிர்க்கிறேன்).
நாம் நம் சுயத்தை இழந்தாலும, சுதந்திர மூச்சை புகைமேகங்கள் தடுக்கமுடியாதென தொடர்ந்து செயல்படும் நம் சொந்தங்களால் வண்ண வண்ண விளக்கிட்டு, சிட்டுக்களை ஆடவிட்டு, கோடிகளில் புரளும் வீரர்களைக் கொண்டு விளையாட்டுக்கள் நடத்தமுடியாதுதான். ஆடுகிறேன் ஆட்டமெனச் சொல்லி நாடுவிட்டு நாடு பறக்க முடியாதுதான். நரம்பெல்லாம் சுதந்திரமே ஓடும் போது தரணி புகழ எப்படி விளையாட்டு நடத்த முடியும். குடியுரிமையற்ற அகதிச் சூழலி;ல் நம்மால் மட்டும் முடியவாச் செய்கிறது. இருப்பினும் தமிழர்கள் நாங்கள் இனத்தாலும் மொழியாலும் ஒன்றிணைவோம் என முழக்கமிட்டு ஈழம்; விளையாட்டுக் கழகம் தொடங்கியுள்ளார்கள் நம்மவர்கள். முக்கிய சிறிய நிகழ்வுகள் பதிவு பெறாமல் போவதென்பது வரலாறு தோறும் நிகழும் வேளையில் நம் மக்கள் புலம்பெயர்ந்த பகுதிகளில் நடைபெறும் விளையாட்டுச் சாதனைகளை பதிவு செய்கிறார்கள் நம் இரத்தங்கள் என எண்ணும்போதே நெஞ்சம் நிறைகிறது.
மகிழ்ச்சியின், இணைவின், எழுச்சியின் அடையாளமாக மட்டுமல்ல விளையாட்டுக்களை எதிர்ப்பின் அடையாளமாக்க முடியும். நியாயங்கள் வேலியிடப்படும் போதும், சுதந்திரம் மறுக்கப்படும் போதும் ஒற்றுமை சொல்லும் விளையாட்டுக்களை எதிர்க்குரலாக்க முடியும். நிகழ்வெளியில் ஆதாரங்கள் நிறைந்து கிடக்கின்றன.
சீனாவிடமிருந்து தனிநாடு பெற்று சுயமாய் நிற்க அய்ம்பது ஆண்டுகளாக முயன்று வரும் திபெத் தன் முயற்சியை உலகத்தின் கவணத்தில் கொண்டுவர இந்த ஆண்டு (2008) சீனாவில் நிகழவிருக்கின்ற ஒலிம்பிக் போட்டிகளை எதிர்ப்பின் அடையாளமாக்கி இருக்கிறது. விளைவு, எங்கெல்லாம் ஒலிம்பிக் சுடர் வலம் வந்ததோ அங்கெல்லாம் அங்குள்ள திபெத்தியர்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவுசெய்திருக்கிறார்கள்.
1976-ம் ஆண்டின் உலக ஒலிம்பிக் போட்டியை தென்னாப்பிரிக்காவுடன் (கறுப்பர்கள்) இணைந்து நியூசிலாந்து (வெள்ளையர்கள்) நடத்தியதால் வெள்ளை இனவாத அரசியலுக்கு எதிராக 22 ஆப்பிரிக்க நாடுகள் உலக ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணித்து எதிர்ப்பு காட்டின. 1977-ல் கிலெனிசுல் என்ற இடத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
மொஸ்கோ, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததை எதிர்த்து 1980-ல் மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணித்து எதிர்ப்பை பதிவுசெய்தது அமெரிக்கா (பின்னாளில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானையும் ஆக்கிமித்தது என்பதும் வரலாறு). குவைத்தை ஈராக் ஆக்கிரமித்ததால் 1990 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட ஈராக்கிற்கு ஆசிய ஒலிம்பிக் குழு தடைவிதித்து தன் எதிர்ப்பை பதிவுசெய்தது.
ஒன்பதாவது உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் இலங்கை பங்கேற்றபோது ஒரு போட்டியின் நடுவே புலிக்கொடியை துக்கிக்கொண்டு ஓடினார் மயூரன். விசாரித்தபோது “ஈழத்தமிழர் பிரச்சனையை அனைத்துலக சமூகத்துக்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்துடனே நான் மைதானத்தின் உள்நுழைந்தேன்” என தன் எதிர்ப்பை பதிவுசெய்தார் நம் ஈழத்துக் குலக்கொழுந்து.
நியாயம் வேண்டுவோர், சுதந்திரமாய் நிற்க ஒரு பிடி மண் வேண்டுவோர், துடிப்போசை அடங்குமுன் குடிமகன் என்றொரு அங்கிகாரம் வேண்டுவோர், அடிமை பூமியையல்லாமல் சொந்த நாட்டை உரிமையாக கொடுத்துச்செல்ல நினைப்போர் எல்லோருக்குமே தங்கள் எதிர்ப்பினைப் பதிவுசெய்ய பரந்த ஊடகங்களும், திரண்ட மக்கள் கூட்டமும், அளப்பெரிய வாய்ப்புகளும் தேவைப்பட்டதில்லை.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், சிறு துறும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழிக்கேற்ப கிடைத்த சின்னஞ்சிறிய வாய்ப்புகளையெல்லாம் எதிர்ப்பை பதிவுசெய்யும் ஆயுதமாக்கிக் கொண்டார்கள். திபெத்தியர்களும், ஆப்பிரிக்கர்களும், ஈழத்தமிழர்களும் மட்டுமல்லாமல் மானமும், அறச்சினமும்கொண்ட ஒவ்வொரு மக்களும், மக்களினமும் வாழ்ந்து சொன்ன பதில் இது.
மீண்டும் ஒருமுறை கொட்டப்பட்டு மாணவரின் கேள்வியை வாசியுங்கள். சிந்தியுங்கள். உங்கள் பதில் என்ன?. உங்கள் பதில் உங்களை வலுப்படுத்தட்டும். இரத்த நாளங்களில் இட்டுவையுங்கள் உயிரூட்டட்டும். சிறு பொறிதான் இருளை அகற்றும் மறந்துவிடாதீர்கள்.
தோழமையுடன்
அருட்சகோதரர் சூ. ம. செயசீலன்
இளங்கவி ஈழபாரதியின்
புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்
``````````````````````````````````````````````````````
- 5 -
``````````````````````````````````````````````````````
எங்களின் தாய்மொழி
இனிய தமிழ்
இழப்புகளின் தாய்மொழி
இது மோமதியின் வரிகள் .சற்று ஆழ்ந்து படித்து பார்த்தோம் என்றால் இரு வேற்றுமையான கருத்துக்களை முன்வைத்து இருக்கிறார். தமிழ் மொழியை இனிய மொழியென்றும் முன்பு இழப்புகளின் மொழி என்றும் ஒரு முரண்பாட்டை முன் நிறுத்தி இருப்பதாக தோன்றும். ஆனால் இது முரண்பாடு அல்ல. முடிவு தெரியாத போராட்;டத்தின் தெறிப்பில் புலம்பெயர்வின் வலியால் வந்த வார்த்தை(வாழ்க்கை) இங்கு கவிதையாக உயிர் பெற்று இருக்கின்றது.
இன்று உலக நாடுகளில் 59 நாடுகளில் தமிழ்மொழி பேசப்பட்டு வருகின்றது. அதே வேளையில் இன்று உலக மொழிகளின் தரவரிசையில் 5ம் தரத்தில் தமிழ்மொழி உள்ளது. என்பது நமக்கு பெருமை தரக்கூடிய விடையமாக இருந்தாலும் ஜ.நா. வின் யுனெஸ்கோ நிறுவனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்மொழி என்று அறிவித்திருந்;த போதிலும் நடுவண்ணரசு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு தொண்மையான மொழி என்று அறிவித்து இருப்பது சிறுமைப் படுத்தும் விடையாகவே உள்ளது.

விலங்குகளும் பறவைகளும் பாதுகாக்கப்பட்டு வரும் சமயத்தில் ஆறறிவு படைத்த மனித வாழ்க்கை மட்டும் கேள்விக்குறியாக இருக்கின்றது. இன்றுவரை உலகளாவிய ரீதியில் 27 மில்லியன் மக்கள் வெளிநாடுகளில் அகதிகளாகவும் 13 மில்லியன் மக்கள் சொந்த நாடுகளில் அகதிகளாகவும் உள்ளனர். 1983க்கு முன்னர் சுமார் 2 இலட்சம் பேர் இந்தியாவில் இலங்கை நாட்டவர்கள் புலம்பெயர்ந்து இருக்கின்றார்கள்.

மனித வாழ்வின் இன்றைய நிலைப்பாட்டை பதிவு செய்துஇருக்கிறார் ‘இன்றைக்கு உயிரோடிருக்கிறேன்’ மூலம் கவிஞர் அருணா சுந்தரராசன்.

தோட்டத்திலிருந்து
வீடு திரும்பியிருந்தன
கால்நடைகள்
இரை உலா முடித்து
கூடு திரும்பியிருந்தன பறவைகள்
பள்ளிக்கூடம் சென்றிருந்த
அக்கா மட்டும்
வீடு திரும்பவேயில்லை.


எல்லாமே வீடு திரும்பியிருந்தன அக்கவைத் தவிர. இந்த உறவுகளின் தவிப்பு இன்று நேற்று அல்ல கடந்த இருபத்தைந்து(25) வருடங்களாக எத்தனை உறவுகளை இழந்தோம்? எங்கு வாழ்க்கையைத் தொலைத்தோம்? தெரியவில்லை. அக்கா வீடு திரும்ப வில்லை என்றால் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. விடுதலை போராட்டத்தில் தன்னையும் சக போராளியாக இணைத்து இருக்கலாம். பரவாயில்லை ஆனால் அவளை கடத்தியும் இருக்கலாம், கற்பழித்தும் இருக்கலாம், கொலைகூட செய்து இருக்கலாம்.

இது தினந்தோறும் நடக்கும் விடையமாக மாறிவிட்டது. மனித உரிமைகளை மீட்டு எடுக்கின்ற ‘மனித உரிமை கழகம்’ உலக நாடுகளுக்கான ஜ.நா. சபை போன்ற நடுநிலை அமைப்புகள் சர்வேதேச அழுத்தங்கள் கொடுத்த போதிலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
இதற்கு எல்லாம் முடிவு என்ன? என்ற கேள்விக்கு கவிஞர் இவ்வாறாக பதிவு செய்து இருக்கிறார்.

காடுகளின்
வரலாறு என்பது மாறி
வரலாறுகள் காடுகளில்
பதிவு செய்யப்பட்டுக்
கொண்டிருக்கின்றன.


இதே அழுத்தத்தோடும் உணர்வுகளின் வெளிப்பாடாக கவிஞர் சு,சிவா அவர்களின் ஆழ்மனதில்; இருந்து வெடித்து சிதறிய துளிகள் இப்படியாக கண்ணீரும் இரத்தமும்

என் கவிதைகள்
கண்ணீரில்
முத்துக்கோர்க்கும்; முயற்சியல்ல
கண்ணீரை
இரத்தமாக்கும் முயற்சி


கவிதை என்பது அழகியல் மட்டும் அல்ல காதலின் வெளிப்பாடுகளில் வரும் மாயத் தோற்;றமும் அல்ல மனித வாழ்வின் உணர்வின் வெளிப்பாடு உயிரின் ஓசை வாழ்வின் வலியே கவிதை அப்படிப்பட்ட கவிதையே கவிதை.

வலிமை பெற.........
``````````````````````````````````````````````````````

ரிஷி
வாழவந்தான் கோட்டை

``````````````````````````````````````````````````````

சுதந்திர தேசத்தில்
சுகமாக வாழவந்த
சாமந்தி - பூவே

வா
நாம் இருவரும்
சேர்ந்தே போவோம்
புதுயுகம் படைப்பதற்கு!

சுதந்திர தேசத்தில்
சூரியனை எதிர்த்த - நீ
அன்னியனை
விரட்டிட......
புயலாக புறப்படு
விடியலைத் தேடி.......

விடியும்!
என்றோ ஒருநாள்
அன்றே
நம் திருநாள்
உதயமாகட்டும்
அதுவரை
காத்திருப்போம்...
சுகமாக வாழவந்த
சுதந்திர தேசத்தில்............?
தடைகளை உடைத்து விளையாடு
``````````````````````````````````````````````````````
ஈழத்துச் செல்வன் இரா. லிங்கேஷ்
வாழவந்தான் கோட்டை
``````````````````````````````````````````````````````
எல்லையில் இரு மாகணம்
ஏழ்மையில் எட்டு மாவட்டம்
எத்தனை திறமை இருந்தும்
ஏற்க மறுக்கும் அரசாங்கம்
செத்துப் போகப் பிறந்த
சில்லறைத் தமிழனுக்கு
சிட்ணியில் என்ன ஒலிம்பிக்
எண்ணும் ஏழனம்

பட்டெண அங்கு சுற்றி வளைப்பு
பந்து விளையாடும் சிறுவன்
பயங்கரவாதி என்று சிறைபிடிப்பு

பாடசாலை மணி ஓசை
பதிலாக காலையில்
வெடி ஒசை

கட்டம் கட்டமாய் கிளிதட்டு
எம் கடக்கரை மணல் விளையாட்டு
கதிரவன் மறையும் நேரம்
கம்பிக் கூட்டில் சிறைவாசம்

பட்டது போதும்
பொங்கி எழு
பயம் இனி இல்லையென்று
ஆணையிடு
சட்டம் இட்ட சாதி வெறியர் முன்
சரித்திரம் படைக்கப் புறப்படு

கொட்டும் மழையில்
குமிழி போல் அலைந்தாலும்
குறுகிய காலத்தில்
விடுதலை காண
கண் கெடுக்கும் கயவர் முன்
களத்தில் இறங்கி விளையாடு

பேரினவாதம் காட்டும் ராஜங்கம்
பிடியில் இருந்து நம்மைக் காக்க
தலைகள் சில நேரம் சாயலாம்
தமிழினம் சாயாது என்ற
தங்கத் தலைவன் பாதையில்
தடைகள் உடைத்து விளையாடு.
புவனேசுவரன்
நாரணம்மாள்புரம்



மகள் யாழ்ப்பாணத்தில்
மனைவி கொழும்பில்
தந்தையோ வன்னியில்
நோயுற்ற தாய் தமிழகத்தில்
உறவினர் ஜெர்மனியில்
பாலை நிலத்தில்
அலைக்கழிக்கப்படும்
ஒட்டகம் போல்
நான் ஒவ்வொரு நாளும்
ஒரு நாட்டில்
குரங்கிடம் அகப்பட்ட
பஞ்சடைத்த தலையணையாய்
எங்கள் குடும்பம்.
கனவாகும் வாழ்க்கை

ஏ. கௌரி
நாட்டரசன் கோட்டை

என் வேதனையை
வெத்துப் பேப்பரில்
விளக்கிச் செல்லலாம்
பேனாவை எடுத்தால்
வெட வெடக்கிறது கை

கண்ணீரை மையாக்கி
கவிதை எழுதும்
சிறகொடிந்த பறவை நான்
கண்களை மூடினால்
கனவிலும் அலறல் சத்தம்
உணவிலும் கண்ணீர் வாசம்

வன்முறை களத்தில்
வாழும் எம்மக்கள்
வாழ்க்கை விடியாதா?
மரண யுத்தத்திலிருந்து
மனிதம் விடுபட்டு
சமாதானம் பிறக்காதா?

புலம்பெயர்ந்த வாழ்வு
புரியாத புதிராய்
பதினெழு வருடங்களாய்
பாதை தெரியா வாழ்க்கை
எங்கே போகிறோம்
எதற்காய் வாழ்கிறேம்
எதுவும் புரியவில்லை
அடுத்த தலைமுறையாவது
அகதிப்பட்டம் தவிர்க்குமா?

மண்ணின் மைந்தராய் விளையாடு

ஈழக்கவிதாசன் மா.ஞானசூரி
அறந்தாங்கி.


விளையாடு விளையாடு -வியர்வை
வழிந்தோட விளையாடு - மூச்சு
சீராக விளையாடு!
உடலும் மனமும் - உறுதி
பெற்றிட விளையாடு !
மைதானம் சென்று - மண்ணின்
மைந்தராய் விளையாடு!

குளிர்சாதன அறைக்குள்
வியர்வை சுரக்காத - கணினி
விளையாட்டு வேண்டாமே!
நாகரீகமென மயங்காதே ........
நாணயங்களை இழக்காதே.....

விளையாடு விளையாடு
உடலும் மனதும்
உறுதி பெற்றிட - மண்ணின்
மைந்தராய் விளையாடு.



------------------------------------------------------------------

விளையாட வழி செய்வோம்

மரிய செல்வி 8-ஆம் வகுப்பு
வாழவந்தான் கோட்டை

விளையாட்டின் விந்தையில்
வியந்தோம் குழந்தைகள்
விளையாட்டை விளையாட
வீதிக்கு வந்தோம்
எங்கள் நிலை
விளையாட்டை தடுத்தது

பறவையின் முறிந்த சிறகாய்
எங்கள் வாழ்க்கை நிலை
விளையாட்டை முறித்தது
வளரும் செடியை
கிள்ளி எறிந்தது போல்
மனதில் உள்ள
விளையாட்டை கிள்ளி எரிந்தனர்.

மனதிற்குள் விளையாட்டை
விளையாட நினைத்தோம்
மனதில் நினைத்தது
நினைத்தது தானா
இல்லை
நினைத்தது நிறைவேரும் நாள்வருமா?

கூடி வாழும்
குழந்தைகளாய் நின்று
ஒற்றுமையைக் கற்று
ஒன்றாய் நின்று
பின்நாளில்
எங்கள் தங்கைகள்
இனிதாய் விளையாட
வழி செய்வோம் நாங்கள்.

பிழைக்க வந்துள்ளேன்

````````````````````````````````````````````````````````
ம.சி. தமிழினி 12 வகுப்பு
வெல்கம் காலனி. சென்னை -101
````````````````````````````````````````````````````````

கண்விழித்துக் கண்ணாடியில்
என்னைக் கண்டதும்
ஒரு பெருமூச்சு
அங்கு மரங்களில் பூக்கள் இல்லை
வீதிகளில் மனிதரில்லை
இரண்டுமே கல்லறைகளில்

கட்சிக் கொடிகளுக்குள்
சிக்கிச் சின்னாபின்னமான
இந்த வாழ்க்கையை சுமந்துகொண்டு
எவ்வளவு தூரம் தான் நகர்வது?

இரத்த வாடையை தொடர்ந்து
நுகர மறுக்கும் இந்த வாழ்க்கையையும்
என் கடமைகளையும்
கடல்கடந்து கூட்டிவருவதை விட
வேறு வழி தெரியவில்லை
உயிரை எடுத்துக்கொண்டு
ஓடி வந்து விட்டேன்
உரிமையை அநாதையாக்கிவிட்டு

வணிகக்காரர்கள் தான் பாவம்
அவர்கள் வரவுசெலவில்
என்னை அறவிடமுடியாக் கணக்கில்
பதிந்திருப்பார்கள்.

நாவலர் மன்றம்

````````````````````````````````````````````````````````
சூ. ம. செ
````````````````````````````````````````````````````````
( நாவலர் உள்ளே வருகின்றார்......)
மாணவர்கள் : வணக்கம் நாவலரே!
நாவலர் : நம் ஈழநாட்டின் தேசிய மலரான கார்த்திகா மலர்போல் முகமலர்ச்சியுடன் உள்ள என் இனிய மாணவர்களே வணக்கம்.
மார்க்சிம்: நாவலரே இன்று ஆரம்பமே படு ஜோரா இருக்கு.
யாழினி: நம்மைப் பார்த்தாலே நாவலருக்கு கவிதை சுரக்குது. அப்படித்தானே நாவலரே.
நாவலர்: ஓம். சரி, இந்த மாத எழுத்தாளர் பேராசிரியர் ‘ நந்தி’ அவர்களைப் பற்றி பேச இருக்கிறோம். யாராவது தகவல் சேகரித்துட்டு வந்திருக்கிறீங்களா?.
கனிமொழி : ஓம் நாவலரே. மூத்த எழுத்தாளரான நந்தி அவர்களின் இயற்பெயர் செ.சிவஞானசுந்தரம். நந்தி அவர்கள் 1928 ம் ஆண்டு மார்ச் 30ம் திகதி பிறந்தார்.
நாவலர்: மிகச்சரியாகச் சொன்னீங்க. பெரும்பாலும் சிறப்படைந்த எழுத்தாளர்களுடைய பின்னணிகள் நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் நந்தி அவர்களுடையப் பின்னணி நமக்குக் கொஞசம் கிடைத்துள்ளது.
கார்க்கி: அப்படியா! சொல்லுங்க நாவலரே.
நாவலர்: ஓம். தமிழும் இலக்கியமும் நந்தி அவர்களின் இரத்தத்தில் கலந்தஒன்று. தாய் வழிப்பாட்டன் தமிழிலக்கிய அறிஞராகவும், பகுத்தறிவு வாதியாகவும் விளங்கியிருக்கார். மறைந்த பேராசிரியர் வி. செல்வநாயகம் இவரது சிறிய தகப்பனார். அதனால தமிழும், இலக்கிய உணர்வும் இளம் வயதிலேயே இவரை ஆட்கொண்டுவிட்டது.இளவழகி: அப்படின்னா, நந்தி அவர்கள் சிறந்த பேராசிரியராக இருந்திருப்பாங்களே.....
நாவலர் : பேராசிரியர்தான். ஆனால் தமிழிலக்கிய பேராசிரியர் அல்ல. இலக்கியத்தின் மேல் ஈர்ப்புக் கொண்டிருந்தாலும் நந்தி அவர்கள் மருத்துவ நிபுணராகத்தான் பணியாற்றினார் அதனால பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், மருத்துவப்பீடத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். உலக சுகாதார மையத்தின் சார்பில் பல நாடுகளுக்கும் சென்று பயிற்சிப் பட்டறைகளும் நடத்தியுள்ளார்.
பனிமலர்: மருத்துவத்துறையிலயும், இலக்கியத்துறையிலயும் ஆர்வத்தோடு செயல்பட்ட நந்தி அவர்களின் முதல் படைப்பு எப்போது வந்தது நாவலரே.
நாவலர் : 1947ல் பட்டப்படிப்பு முன்னிலைக்கல்வி படித்துக்கொண்டிருந்தபோதுதான் பத்திரிகைகளில் எழுதத் துவங்கினார். இவரது முதல் சிறுகதையான ‘சஞ்சலமும் சந்தேகமும்’ 1947ல் வீரகேசரியில் வெளிவந்தது.
திலீபன் : கிராமச் சூழமைவில் வாழ்ந்த நந்தி அவர்கள்,தொழில் காரணமாக சிங்களவர்கள் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் மத்தியிலும் பணிசெய்து வாழ்ந்ததாகக் கேள்விப்பட்டேன் உண்மையா நாவலரே?.
நாவலர் : உண்மைதான். இப்படிப்பட்டச் சூழமைவுகளில் வாழ்ந்ததால்தான் நந்தியின் படைப்புக்களில் உண்மையும், நேர்மையும், மனிதநேயமும் மிளிர்வதைக் காண முடிகிறது.
கனிமொழி: மக்களின் உணர்வுகளை மையப்படுத்தித்தான் எழுதினாங்களா! கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நந்தி அவர்களின் படைப்புகளைப் பற்றியும் சொல்லுங்க நாவலரே.
நாவலர்: நந்தி அவர்கள் இதுவரை எண்பதுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ளார்.அவைகள்; ‘ஊர் நம்புமா?’, கண்களுக்கு அப்பால்’, ‘நதியின் கதைகள்’, ‘தரிசனம்’ என நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. மேலும்; ‘மலைக்கொழுந்து’, ‘தங்கச்சியம்மா’, ‘நம்பிக்கைகள்’ என்ற தலைபுகளில் இவரது நாவல்களும் வெளிவந்துள்ளது.
பூவிழியாள்: மருத்துவப் பேராசிரியராக இருந்ததுனால அவை சம்பந்தமாகவும் புத்தகங்கள் எழுதியிருப்பாங்களே....
நாவலர் : ஓம். ‘அருமைத் தங்கைக்கு’, ‘அன்புள்ள நந்தினி’, ‘நந்தினி உன் பிள்ளை’இ ‘உங்களைப் பற்றி’, போன்ற மருத்துவ நூல்களை எழுதியுளார். அவைகள் பெண்களுக்கும், மருத்துவம் கற்றுக்கொடுக்கும் போராசிரியருக்கும் கையேடுகளாக விளங்குகின்றன.
பனிமலர் : 1947 ல் எழுத ஆரம்பித்த நந்தி அவர்களுக்கு மணிவிழாக்காலம் கடந்திருச்சு இதைஒட்டி ஏதாவது சிறப்பு நிகழ்வுகள் நிகழ்ந்ததா நாவலரே?நாவலர் : ஓம். நந்தி அவர்களின் இலக்கிய நுழைவின் மணிவிழாவினை முன்னிட்டு “நந்தியின் சிறுகதைகள்” என்ற நூலை அவரது நண்பர்கள் வெளியிட்டுள்ளார்கள். என். சோமகாந்தன் என்ற எழுத்தாளர் “ நந்தி-நோக்குகள் இருபத்தைந்து” என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
யாழினி: நாவலரே நம்ம நூலகத்தில் என். சோமகாந்தன் அவர்களின் நூல் இருக்கிறது. அதில் கட்டுரை எழுதியுள்ள பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் “ஈழத்தின் நவீன இலக்கிய வரலாற்றில் நந்தி எனும் எழுத்தாளனுக்கு ஒரு மதிப்பார்ந்த இடம் உண்டு. நந்தியின் ஆக்கங்கள் இல்லாத ஈழத்துத் தமிழ் நாவலும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையும் நிச்சயமாக வளக்குறைபாடு உடையதாகவே இருக்கும்”என எழுதியுள்ளார்.
நாவலர்: மகிழ்ச்சி. சரி அடுத்தமாத நாவலர் மன்றத்தில் எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். நன்றி.
மாணவர்கள் : நன்றி நாவலரே.
மாணவச் செல்லங்களே எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களைப்பற்றிய தகவல்களைச் சேகரித்து நாவலர் மன்றத்திற்கு அனுப்புங்கள்.

Friday, June 13, 2008

வலி -- சூ. ம. செயசீலன்

விடுதலை முகாமின் வீரச்சிறார்களே!
வரைந்து கிடப்பவைகளும், எழுதி இருப்பவைகளும், செவிவழி கடத்தப்பட்டவைகளும் வலி நிறைந்தது வரலாறு, வலியால் நிறைந்ததும் வரலாறு என பதிவு செய்திருக்கின்றன வரலாற்றை.
திசையும் மொழியும் பிரித்து வைத்தாலும் இணைத்திடுவது வலி. முகம் காணா நட்பு கொண்டு நண்பன் கோப்பெருஞ்சோழன் இறந்ததும் வடக்கிருந்து உயிர் துறந்த பிசிராந்தையாரை புறனானூரும், ‘இமயமலையில் ஒருவன் இருமினான் குமரியிலிருந்து மருந்து கொண்டோடினான்’ என பாரதிதாசனும் பதிவு செய்தது ‘வலியில் இணைதல்’. சுழலும் பூமியின் எத்திசையில் இருப்போரின் வலியிலும் வலிகாண்பதும், பகுத்தறிவற்ற உயிர்களுக்காகவும் உரிமை பேசுவதும் வலியில் இணைதலின் தொடர்ச்சியே.
‘வலியில் இணைதல்’ ஆயுதம் வழி நிகழ்வது மட்டுமல்ல. உணர்வின் வழி, ஊக்கத்தின் வழி, பதிவதின் வழி நிகழ்வது. ‘ நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என எதிரி தீர்மானிக்கும்’ போது ஆயுதமும், அறமும் கால இடைவெளியில் முன்னிலை பெறுவதும் அத்தகையதே. விடுதலை வேள்வியில் தீபமேற்றிய ஒவ்வொரு நாடும் தந்துள்ள பதிவு இது.
கரம் கோர்த்து களம் கண்டு, 1948-ல் கண்ட சுதந்திரம் தமிழை, தமிழரைக் காக்குமா? என சிந்தி;த்த காலத்தில் நிகழ்ந்தேறிய இனப்பாகுபாடும், படுகொலையும் உணர்வுகளை உசுப்பியதும், உணர்வாளர்களை செயல்முனையத் தூண்டியதும், ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கு இவ்வரலாற்றை சொல்லிச் சொல்லி வளர்த்ததும் வரலாறு. தலைவரும் விதிவிலக்கல்ல (குசழவெடiநெஇனுநஉ.30இ 1985).

ஆண்டுதோறும் பாடசாலைகளிலும், பணியிடங்களிலும், பொது இடங்களிலும் பெற்ற வலி ‘எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் உரிமை பெற்றவர்களாக, இறைமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்’ என ஒவ்வொருவரையும் எழுப்பியது. 1983-ல் தமிழர்களை கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி மொத்தமாக இடம்பெயர வைத்த ஆடிக்கலவரம் எழும்பிய கரங்களை இணைத்தது. இணைந்தெழுந்தவர்கள் கம்யூனிசம் பேசி…..பிறகு ஆயுதம் கண்டார்கள் ஆயுதம் தாங்கி….. பிறகு மார்க்சிய- லெனினிய பாதைக்கு வந்தார்கள் சிலர் ஆட்சியாளர்களுடன் சமபந்தி கண்டார்கள்.
அமைதியைக் குலைத்தவர்களாலும், அமைதிக்கு வந்தவர்களாலும் வலி அதிகமானது. முதலாமவர்கள் ; நல்ல முடிவு பாராளுமன்றத்தில் கிடைக்குமென்றார்கள், அழித்திட சட்டமும் அங்கே இயற்றினார்கள். தமிழ் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்றத்தில் தடை, பத்திரிகை சுதந்திரந் தடை, மக்கள் வாழ்விடங்களில் குண்டு மழை, உணர்வாளர்களைக் கொன்று குழிகளைத் தோண்டித் தோண்டி புதைத்துப் போன செம்மணி புதைவெளி என சுதந்திர முன்னெடுப்புக்காக அடைந்த வலிகள் அதிகம்.
இரண்டாமவர்கள் 1987 அக்டோபர் 10-ம் திகதி தீட்டிய திட்டத்தால் அதே நாளில் ஈழமுரசு மற்றும் முரசொலி பத்திரிகை அலுவலகங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அக்.21-ம் திகதி மருத்துவமனை தாக்கப்பட்டபோது பிணங்களோடு பிணங்களாக படுத்து தப்பித்த சோகம் நிகழ்ந்தது. ஏன் கைது செய்யப்பட்டோம்? எதற்கு அடைக்கப்பட்டோம்? எப்போது விசாரணை? எப்போது விடுதலை? என தனக்கும் தெரியாமல், அதிகாரிக்கும் தெரியாமல் சிறை இருட்டுக்குள் அடிபட்டவர்கள் அதிகம். இவர்களில் பலர் இன்றும் நம் வீடுகளில் அல்லது நம் முகாம்களில் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பதிவுசெய்ய வேண்டியவைகள் நிறைய உண்டு.

அரை நூற்றாண்டுக்கு முந்தைய பெற்றோர்களின் வேகமும், விவேகமும், வரலாற்றை பதிவுசெய்யவேண்டியதன் அவசியமும் புரிந்துள்ளவர்கள் இன்று அரிதாகிப் போய்விட்டார்களோ என்ற அச்ச உணர்வு மேலோங்குகிறது. வலியோடு போராடி ‘நிதித்துறை’, ‘நீதித்துறை’, ‘காவல்துறை’, ‘வனத்துறை’, அரசியல் துறை’ என அமைத்து நமக்கான எதிர்காலத்தை உருவாக்கி வரும் வீர வரலாற்றை உள்ளத்தில் ஏந்துவதும், ஏற்றுவதும், காலத்தின் அவசியம்.
அவசியம் மறந்த நமக்குள்ளே கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எத்தனை கொள்ளைகள், காதல் விளையாட்டுக்கள், களியாட்டங்கள், உறவு தவறிய உறவுகள், தமிங்கில உரையாடல்கள்….இதில் ஏதாவதொன்று நம் வரலாறு சொல்கிறதா? வரலாறு தெரியாத புதிய இனம் இவ்வுலகில் வளருவது பேரழிவல்லவா?. அது நம் தமிழினம் என்பதும் அதை உருவாக்குவது நாம் என்பதும் இழிவல்லவா?
வரலாறு தெரியாது உருவாகும் நம் இனம் ஒருநாள் சுதந்திர பூமிக்கு செல்லும். மலசலக் குழிக்குள் முட்டி நிற்கும் நம் வீர எலும்புகள் எப்படி இங்கு வந்ததெனத் தெரியாது விழிபிதுக்கும். வீடு கட்ட தோண்டும் குழிகளில் இருந்து மொத்தம் மொத்தமாய் வெளிவரும் ஆடைகளும், எலும்புகளும் நம் வீரமக்களுடையது எனத் தெரியாது குறிபார்க்கும், செய்விணை எனச்சொல்லி வலி நிறைந்த வீரத்தை அடகுவைக்கும். உனது வீரமும், வீர வரலாறும் மொத்தமாய் சிதைந்து போகும். இதுதானா நமது இலட்சியம்?.
முடிவெடுங்கள். தூய்மையான வரலாறு பாய்ச்சப்படும் இரத்தம் துணிவுபெற்றெழும், தனக்கான வரலாற்றை தானே பதிவுசெய்யும் என்பது நம் முன்னோர்கள் கற்றுத்தந்த பாடம். எப்போது நாம் புரிந்துகொள்ளப்போகிறோம் இதை?

நாவலர் மன்றம்

--------------------------------------------------
(நாவலர் உள்ளே வருகிறார்)
மாணவர்கள் : வணக்கம் நாவலரே!
நாவலர் : வணக்கம். அதிகமான உற்சாகத்துடன் இருக்கிறீங்க. ஏதாவது சிறப்பானது...
கனிமொழி : ஓம். இந்த மாதம் இரு துறைகளில் சிறந்து விளங்கின ச.முருகானந்தம் பற்றி தெரிஞ்சுக்கப்போறோமே அதான்…
நாவலர் : மகிழ்ச்சி;. இருதுறைகளில் சிறந்து விளங்கினார்ன்னு எப்படிச் சொல்றீங்க?
இனியன் : நம்ம நூலகத்தில உள்ள ச.முருகானந்தம் அவர்களோட நூல்களில் இருந்து தெரிஞ்சுக்கிட்டோம்.
அபிநயா : சிறந்த எழுத்தாளராகவும்,சிறந்த மருத்துவராகவும் இருப்பதாக வாசித்தோம் நாவலரே.
நாவலர் : நீங்க சொன்னது மிகச்சரி.
நாவலர் : ச.முருகானந்தம் எங்கு படித்தார் என்பதையும் நீங்களே சொல்லுங்க.
இளவழகி : ஓம் சொல்லுறோம் நாவலரே! ச.முருகானந்தம் அவர்கள் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி, யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.
நாவலர் : மிகச் சரியாக சொன்னீங்க. மாணவராக இருந்தபோதே எழுத ஆரம்பித்த ச.முருகானந்தம் அவர்களின் முதல் சிறுகதை 1976-ல் தினகரன் பத்திரிகையில் வெளியானது. அன்றிலிருந்து இன்றுவரை 175க்கும் மேலான சிறுகதைகள், 5 குறு நாவல்கள், 50க்கும் மேலான கவிதைகள் போன்றவைகளை எழுதியுள்ளார்.

கனிமொழி : நாவலரே, அய்யாவின் இரண்டு கதைகளை நான் வாசித்தேன். இரண்டுமே மக்கள் பிரச்சினைகளை மையமாக வச்சுத்தான் எழுதப்பட்டிருக்கு…
நாவலர் : ஓம். துன்பங்களும், பிரச்சனைகளும் நிறைந்துள்ள அன்றாட நடைமுறை வாழ்க்கை அனுபவங்கள்தான் ச.முருகானந்தம் அவர்களின் கதைக்கரு.
(மாணவர்கள் வியப்புடன் பார்த்தல்)
என்ன இப்படி பார்க்கறீங்க. சுற்றி நெருப்பு எரியும் போது அதைத்தானே முதலில் எழுத வேண்டும்.
பனிமலர் : இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லுங்க நாவலரே!
நாவலர் : ம்…சொல்றேன். சிறுகதை எழுத ஆரம்பித்த காலங்களில் சமூகத்தில் நிலவக்கூடிய சாதியம், சீதனம், பெண்ணியம், வர்க்க முரண்பாடுகள், மனித மனங்களின் சிக்கலான உணர்வுப் போராட்டங்கள் போன்றவைகளை கருப்பொருளாக வைத்து எழுதினார்.
யாழினி : பிறகு…
நாவலர் : போரும் அதன் அழிவுகளும் நிறைந்த போது அந்த இழப்பினையும், வலியையும் கருப்பொருளாகக் கொண்டு எழுதினார்.
பூவிழியாள் : அப்படின்னா அய்யாவோட நூல்களை வாசித்தாலே; நம் வரலாற்றை நாம் தெரிஞ்சுக்க முடியும் அப்படித்தானே…
நாவலர் : நிச்சயமாக. ‘தரை மீன்கள்’, ‘மீன் குஞ்சுகள்’, ‘இது எங்கள் தேசம்’, ‘இனி வானம் வசப்படும’;, ‘ஒரு மணமகளைத் தேடி’ எனும் 5 சிறுகதைத் தொகுதிகள், ‘நீ நடந்த பாதையிலே’ என்னும் கவிதைத் தொகுதி, ‘நாளை நமதே’ என்ற கட்டுரை நூல் என மொத்தம் 7 நூல்கள் வெளிவந்துள்ளன.
நளன் : அய்யா அவர்கள் பெற்ற பரிசுகளையும் சொல்லுங்க நாவலரே!
நாவவர் : சிறுகதைகள் மற்றும் கவிதைகளுக்காக 15 முறைகளுக்கும் மேலாக பரிசுகள் பெற்றிருக்கார். 2005 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான சாகித்திய விருது இவரது ‘தரை மீன்கள்’ நூலுக்கு கிடைத்தது. ‘மீன் குஞ்சுகள்’ சிறுகதை சென்னை இலக்கிய சிந்தனை பரிசு பெற்றது.
கனிமொழி : மருத்துவராக ஆற்றிய பணிகளையும் சொல்லுங்க நாவலரே!
யாழினி : நான் சொல்றேன் நாவலரே!
நாவலர் : மருத்துவப் பணி செய்ய நியமனக் கடிதம் பெற்றுக் கொண்ட அய்யா அவர்கள் வன்னியில் யானைகள் சூழ்;ந்த அக்கராயன் பகுதிக்கு வந்தார். யானை பயமும் நுளம்புக் கடியும் இருந்ததால இரவு மட்டும் தங்கிவிட்டு சொந்த ஊருக்குப் போயிட்டாரு…ஆனாலும் திரும்பி வந்து அக்கராயன், வன்னேரிக்குளம் ஆகிய குடியேற்றக் கிராமங்களில் 30 ஆண்டுகள் சேவை செய்தார்.
நளன் : இலங்கை மாதிரி நாட்டுல தமிழ் மருத்துவர்கள் பணிபுரிவது கடினமாச்சே.
குழலினி : ஓம். பொதுமக்களுக்கும், போராட்டத்தில் அடிபட்டவங்களுக்கும் மருத்துவ சேவை செய்யும் போது பலமுறை விசாரிக்கப்பட்டிருக்கிறார். பயமுறுத்தலும் நிகழ்ந்தது. ஆனாலும் துணிவுடன் சேவை செய்தார்.
யாழினி : அதோட அப்பகுதியில் கல்வியறிவைப் பெருக்கினார். மூடநம்பிக்கையைக் குறைத்தார், சுற்றி இருந்த கிராமங்களில் மது ஒழிப்பைக் கொணர்ந்தார்.
பூவிழியாள் : கேட்கவே மிகவும்; மகிழ்ச்சியாக இருக்கு.
நாவலர் : அடுத்தமாத நாவலர் மன்றத்திற்கு மூத்த எழுத்தாளர் நந்தி அவர்களைப் பற்றி தகவல் சேகரித்து வாருங்கள், சரியா…. நன்றி.
மாணவர்கள் : நன்றி நாவலரே.
-------------------------------------------------

ஈழகவிதாசன். மா. ஞானசூரி

---------------------------------

உயிருள்ளவை அனைத்தும் உணரும் நிகழ்வே வலியாகும். வலி என்பது இப்படியானது அப்படியானது என விளக்கிக் கூற முடியாது. அவற்றை ஒவ்வொருவரும் உணர்ந்தால் மட்டுமே முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்புவியிலும் பிறந்த மனிதர் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வலிக்கு ஆட்பட்டுச் செல்கிறார்கள். ஒரு சாரார் வலிகளை தோற்றுவிக்கிறார்கள். இந்த 21- ஆம் நூற்றாண்டிலும் விஞ்ஞானம் வேகமாக வளர்ச்சியடையும் காலத்திலும் மனிதன் வலிகளுக்கு ஆட்படுவது விந்தையாகத்தான் உள்ளது. தாய்க்குத்தான் தெரியும் பிரசவத்தின் வலி. பின்பு அவள் மழலையின் குரல் கேட்டதும் தன் வலிகளை மறந்து போகிறாள். ஏன் ஈழமண்ணை பிரிந்து வாழும் நாமும் இந்த தாய்மைக்கு ஈடானவர்கள்தான். ஆனால் தமிழகத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளான தடுப்பூசிக்கு குழந்தைகள் பலி, தாமதமான பிரசவத்தினால் தாய் இறப்பு, குழந்தைகள் காணாமல் போதல், சிறுநீரக மோசடி, மருத்துவ மாணவர்களும், மருத்துவர்களும் செய்த போராட்டங்கள். வலிகளை தோற்றுவிப்வைகளாகவே உள்ளன. சமீபத்திய ஆய்வுப்படி 100 இல் ஒரு பிரசவம் இறப்பில் முடிகிறது.
இன்றைய காலகட்டத்தில் மருத்துவத்துறை பல சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கேதான் சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இந்த உலகில் உயிரோடு உலாவரும் தெய்வங்கள் மருத்துவர்கள்தான். நம் தமிழ்ப்பெண்கள் கணவனைத் தவிர வேறு ஆண்களை தம்மை தொட அனுமதிக்காதவர்கள் மருத்துவ தெய்வத்தை அனுமதிக்கிறார்கள். ஆனால் இன்று அத்தெய்வங்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. சிறுநீரகக் கொள்ளையர்களாகவும் மன்மத சாமியார்களாகவும் அவதாரம் எடுத்து ஆடுகிறார்கள். இவர்கள் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் கிராமங்களில் சேவைசெய்ய எதிர்ப்புத் தெரிவித்து மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்ம் உண்ணாவிரதம் மறியல் என போராட்டங்களை நிகழ்த்தியது வேதனையான நிகழ்வு. அரசின் மருந்துக்கு உள்ள வீரியம் அரசு மருத்துவர்களுக்கு இல்லாது ஏன்? “பணம் பத்தும் செய்யும்” என்பது உண்மைதான்.

இந்நேரத்தில் நம் புலம்பெயர்ந்த மாணவர்களுக்கு தொழிற்கல்விக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்கான காரணத்தை கூறவேண்டியது முக்கியமானதாகும். 2004 - 2005ஆம் கல்வியாண்டில் இடஒதுக்கீடு வேண்டி பலஆயிரம் கையெழுத்துகளோடு மனு ஒன்று அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதற்கு கேட்ட கேள்வியும் பதிலும் நம்மை வெட்கித் தலைக்குனிவுக்கு ஆளாளக்கியது. கடந்த பத்தாண்டுகளில் பல மாணவர்கள் மருத்துவம் பயின்று சிலர் பட்டம்பெற்று வந்திருக்கிறார்கள் மகிழ்ச்சியான விசயம்தான். ஆனால் இவர்கள் அனைவரும் முகாம்களில் சேவை செய்கிறார்களா? இல்லையே பலர் வெளிநாடுகளக்குச் சென்றுவிட்டார்கள். இருப்பவர்களும் எம் மக்களுக்கும் சேவையாற்றவில்லை முகாம் மக்களுக்கும் பயன்படவில்லை. இப்படியிருக்கும்போது இடஒதுக்கீடு தேவைதானா? இடஒதுக்கீட்டால் நமக்கும் நஷ்டம்தானே மிச்சம் என்றார்கள். இந்தச் சூழலிலும் புதுச்சேரி முகாமில் உள்ள நம் மாணவர் புதுச்சேரி “ஜிப்மர்” மருத்துவமனையில் மருத்துவம் செய்வதை ஆனந்த விகடன் நேர்காணல் கண்டது ஆறுதலான செய்தியாகும்.
“வாடிய பயிரைக்; கண்ட போதெல்லாம் வாடினேனே” என்ற வள்ளலார் நம் மனித மரபில் வந்;தவர்தானே, கருவுறாது கருணையுற்ற அன்னை தெரசா, பாரத சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த மகாத்மா காந்தி அனைவருமே பிறர் வலிகளை தம் வலிகளாய் எண்ணியவர்கள் நான் சொல்லிக்கொள்வது இதுதான். மருத்துவத்துறை ஒரு பொன்னான சேவைத்துறை. சேவை செய்யும் நோக்கமிருந்தால் மருந்துவம் படியுங்கள். பணம் சம்பாதிக்க வேண்டுமானால் வேறுபல துறைகள் இருக்கின்றன. தயவு செய்து மருத்துவத்துறையை எடுத்து மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள். பத்து இருபது சம்பாதிக்கும் ஆட்டோக்காரன் “பிரசவத்திற்கு இலவசம்” என எழுதி உதவும்போது மருத்துவர்களாகிய உங்களால் ஏன் முடியவில்லை? மருத்துவர்கள் நோயாளிகளின் வலிபோக்க வந்த தெய்வங்கள். வலிபோக்கிகளாய் ஆனால் உயிர் பிழைத்து உளமார வாழ்த்தும் அந்த வாழ்த்துகளும் ஆசியும் எவ்வளவு பணத்தை கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது.

வாழ்த்து

----------------------------------------------
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறந்தாங்கி ஈழத்தமிழர் முகாம் அளவில் முதலிடம் பெற்ற மாணவன் டிக்சன் (394) . 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதே முகாம் அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஷோபா (867). இருவரையும் அறந்தாங்கி ஈழத்தமிழர் முகாம் ஆசிரியர்களும், மாணவர்களும், பொதுமக்களும் வாழ்த்துகின்றார்கள். நாமும் வாழ்த்துவோம்.
----------------------------------------------------

வலி

---------------------
மு. கோமதி
பாப்பாந்தாங்கள்
----------------------

பிரிவின் வலி
பிரிந்தால்தான் புரியும்
இழப்பின் வலி
இழந்தால்தான் தெரியும்
எங்கள் வலி
அகதியாய் வாழ்ந்தால்
உங்களுக்குப் புரியும்

அகதி அகதி என்று
அழைக்கும்போது
கூட்டுக்குள் நத்தையாய்
எங்கள் மனம்
குறுகிப் போகிறது
நாங்கள் மனிதர்கள்
உங்களைப்போல்
எங்களுக்கும் வலிக்கும்.

--------------------------------

இளங்கவி ஈழபாரதியின் --- புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்

நமது சமூகத்தின்
எதிர்காலத் தலைமுறை
பிறக்கும் முன்பே
அகதிப் பட்டம்

இது சவிதா அவர்களின் வரிகள் இக்கவிதையோடு முகாம்களில் நடக்கும் சம்பவங்களையும் உற்றுநோக்கும் போது சற்று தினங்களுக்கு முன்னால் என்னுடைய நண்பரின் மூன்று வயது குழந்தை இப்படிக கேட்டதாம். அப்பா நாம் அகதியா? அகதியென்றால் என்னப்பா? இக்குழந்தை இந்திய தேசத்தில் பிறந்தது. ஆனாலும் அடையாள அட்டையில் அகதியாய். இதில் சில நேரங்களில் திடீர் தனிக்கை(சோதனைகள்) நடைபெறும். அத்தருணங்களில் குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருந்தாலும் சரி, உடல் நலக்குறைவாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக குழந்தையை காட்டியே ஆகவேண்டும். காரணம் இக்குழந்தை இலங்கை அகதிக்கு பிறந்தது.
போர்க்கால சூழலின் காரணமாக இடம் பெயர்ந்தது தவறா? இல்லை இலங்கை அகதிக்கு குழந்தையாய் பிறந்தது தவறா?..... இதே உணர்வுகளின் வலிகளோடு கவிதை தந்து இருக்கிறார். கவிஞர் சு. சிவா அவர்கள் இப்படி

உணவுக்காக மட்டும்தான்
வாய் திறக்க வேண்டுமா
காகத்தின் கூட்டில்
குயில் குஞ்சு

குயில் குஞ்சு வாழ்வதென்னவோ காக்கையின் கூட்டில். கூடு கட்டவும் தெரியவில்லை காக்கையின் கூட்டில் நீண்ட நாட்கள் வாழ்வதும் இல்லை. எப்படி திறப்பது? குயில்களே முதலில் கூடுகளைக் கட்டுங்கள் முடிந்தவரை கட்ட பழகுங்கள் இனி காக்கைகளை எதிர்பார்க்கத் தேவையில்லை.

மனித வாழ்வில் உணவு, உடை, இருப்பிடம் போன்றவகைகள் அடிப்படைத் தேவைகளாய் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் இவர்களுக்கு எல்லாமே கிடைப்பதில்லை. அடிப்படை வசதிகள் இன்னமும் பூர்த்தியாகாத நிலையிலேயே இருந்து வருகின்றது. என்றாலும் அரசின் தற்காலிக வீடுகள், அரசு மானிய அரிசி, அரசின் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் பணக்கொடை போன்றவைகளால்தான் இன்று சில வீடுகளில் அடுப்பு எரிக்கப்படுகின்றது. அகதிகளின் வறுமை நிலை குறித்து த. விஜயசாந்தி எழுதியிருக்கும் கவிதை இது.

“நாங்கள் வறுமைத் தோட்டத்தில்
பூத்துக் குலுங்கும் கண்ணீர்ப்ப+க்கள்
எங்கள் பசிக்கு பட்டினியே தீனி”!

எங்கள் படைப்பாளிகள் பூக்களைக் கூட கண்ணீர் சிந்திக்; கொண்டே தான் பார்க்கமுடிகிறது. ‘பசிக்கு பட்டினியே தீனி’ என்று அழுத்தமாய் பதிவு செய்து இருக்கிறார். எந்த நிலையிலும் எங்கள் மானத்தையும் கௌரவத்தையும் விட்டுக்கொடுத்து வி;;டமாட்டோம். பட்டினி இருந்து மடிந்தாலும் சரி. அகதி வாழ்கையுடன் இன்றைய ஈழத்து வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்கையில் அங்கும் இதைவிட வறுமைநிலை மேல் ஓங்கி இருக்கிறது. நித்தம் குண்டு சப்தம் தொடர்கிறது. வாழ்கையின் ஒவ்வாரு நொடியும் என்ன நடக்கும் என்று தெரியாமல் ஓடி ஒழிந்து கொண்டே இருக்கிறார்கள். என்ற நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது இக்கவிதை

அரை வயிறு பட்டினி
அணுகுண்டு சப்தம்
ஓடி ஒழியும் வாழ்க்கை
ஓயாதா அந்த வேட்கை

இடம்பெயர்வின் இடர்பாடுகள் எத்தகைய வலியைத் தந்தது. உணர்வுகளின் வலியை கண்முண்னே உறவுகளின் உயிர் பிரிந்த வலியை, நிலவின் பிடியில் கரை கடந்த நிலையை கரை பாடாத என்ற ஏக்கத்தில் கண்ட மணல் தீட்டுகளின் மகிழ்ச்சியை இது எல்லாவற்றையும் பதிவு செய்து இருக்கிறார் “வலி”யில் கவிஞர் அறிவுமதி.

“பிழைக்க வந்தவர்கள்
உணர்வார்களா
பிழைத்து
வந்தவர்களின் வலியை”
“மணல் திட்டுகளில்
மூச்சு வாங்கியவர்கள்
மனிதத்
திட்டுகளில்
பேச்சு வாங்குகின்றோம்.”

தொடர்வோம் வலிகளோடு

வாழ்த்து

-----------------------------
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வாழவந்தான் கோட்டை ஈழத்தமிழர் முகாம் அளவில் முதலிடம் பெற்ற மாணவி கிரிசாந்தினி (431), இரண்டாம் இடம் பெற்ற மாணவி நந்தினி (413) . 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வாழவந்தான் கோட்டை முகாம் அளவில் முதலிடம் பிடித்த மாணவி ரிஷாந்தினி (935). மூவரையும் வாழவந்தான் கோட்டை ஈழத்தமிழர் முகாம் பொதுமக்களும், சாரல் ஆசிரியர் குழுவும், மாணவர்களும் வாழ்த்துகின்றார்கள்.
------------------------------------------

சாளரம் துப்பியது அல்லது உனக்கும் நேர்ந்ததா?

-------------------------------
இயல்வாணன்
------------------------------
நான் தூஷிக்கப்பட்டேன்
மிகப்கொடிய வார்த்தைகளால்
நான் பயமுறுத்தப்பட்டேன்
பெயரறியாப் பிசாசுகளால்
நான் தாக்கப்பட்டேன்
இதயமற்றவர்களின்
இரும்புக் கம்பிகளால்
சிறைக் கதவுகள் திறக்கப்பட்டிருப்பது
எனக்காகவென்று
எச்சரிக்கப்பட்டேன் பலநூறு பேரால்
உனக்கும் இது நேர்ந்ததா?
நண்பனே?

எங்கள் தெருக்கள் வழிமறிக்கப்பட்டன.
எங்களுக்கு
நிர்வாணமாக வருவதே
புத்திசாலித்தனமென்று
சோதனைச் சாவடிகள்
ஆலோசனை சொல்லின.
மலங்கழிக்கவும் சலம் விடவும்
பற்றைகளை நாடுபவர்
கொல்லப்பட வேண்டிய கெரில்லாக்காரரென
சட்டவிதிகள் உருமாற்றின மனிதர்களை.
தெரு வீடு பாடசாலை அலுவலகம்
எங்காயினும்
மரணத்துக்கும் பிடிவிறாந்துக்கும்
அவசர அனுமதி தரப்பட்டது.
உன்னூரிலும் இது நடந்ததா
நண்பனே?

ஒரு துப்பாக்கியையோ
இரும்புக் கம்பியையோ
கனவு
திரும்பத் திரும்பத் திரையிடுகிறது.
தூக்கம் கெடும் போதெல்லாம்
சுற்றிலும்
பிசாசுகளின் அரவம் கேட்கிறது.

சூனியத்தில் சுழலும் மனது
திடீரெனப்
பரந்து வீரியம் கொள்கிறது.
எல்லாவற்றிலும் மோதி
எதிரொலிக்கும் உணர்வில்
குருதி
குதித்துப் புரள்கிறது.
உனக்கும் தோன்றியதா
இந்த உணர்வு?

நன்றி: 20-ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்.

------------------------------------------